இலங்கையில் பாடசாலை கேன்டீன்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை!
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (24.09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் அனைத்து உணவகங்களையும் பரிசோதிக்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கு தகாத உணவு வழங்கப்படுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்த அவர், கேன்டீன்களில் விற்கப்படும் உணவுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை […]