உலகம்

விமானத்தை கடத்த முயற்சியா? கடைசியில் நடந்தது என்ன

விமானத்தை கடத்துவது குறித்து தொலைபேசியில் பேசியதாக விமானப் பயணியான இளைஞன்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் யுகே 996 இல் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. விமானம் புறப்படுவதற்கு முன், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன், ‘ஹைஜாக்’ என சத்தம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதுடன், விமானமும் சோதனையிடப்பட்டது. அதன் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. […]

இலங்கை

தேசபந்து தென்னகோனின் ரிட் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

  • June 23, 2023
  • 0 Comments

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு ஜீன் 26 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்  கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ‘அறகலய’ எதிர்ப்பாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பெருந்தொகை பணம் குறித்து தேசப்பந்து தென்னகோனுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு கோரி தேசப்பந்து தென்னகோன் ரிட் மனுவொன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த ரிட் மனுமீதான […]

இலங்கை

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை

  • June 23, 2023
  • 0 Comments

எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த விசேட விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று (ஜூன் 23) கடமைகளை பொறுப்பேற்றார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் மின்சாரம் தடைப்பட்ட காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீண்ட காலமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மே மாதம் ஜனக ரத்நாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து புதிய PUCSL தலைவர் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மே 24 அன்று, […]

பொழுதுபோக்கு

“விஜய் மாமா.. சிகரெட் எல்லாம் குடிக்க கூடாது.. தப்பு” விஜய்க்கு இது போதுமா?

  • June 23, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விஜய் தனது 49ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியிருந்தார். இதை முன்னிட்டு லிளோ படக்குழு பல சர்ப்பிரைஸ்களை அள்ளி வீசியது. அதிலும் நா ரெடி பாடல் மிக வைரலாகியதுடன், விஜயின் நடனம் பலரையும் வியக்கவைத்தது. எனினும் குறித்த காட்சியில் விஜய் வாயில் சிகரட்டுடன் இருப்பது மைனஸாகவே பார்க்கப்படுகின்றது. இதையடுத்து பலரும், அரசியல் ஆசை கொண்ட விஜய் சமூக அக்கறையுடன் […]

இலங்கை

இலங்கையில் இதய சத்திர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படலாம்!

  • June 23, 2023
  • 0 Comments

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக இதய சத்திர சிகிச்சைகள் மூடப்படாம் எனவும் மருத்து வல்லுநர்கள் எதிர்வுக்கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவ வல்லுநர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில்  கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் இடம்பெயர்வதைத் தெரிவு செய்ததாலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டதாலும் மற்றும் ஓய்வுபெறும் மருத்துவர்களின் வயதெல்லை போன்ற காரணிகளாலும்  பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்காண […]

இலங்கை ஐரோப்பா

அன்டோனியோ குட்டரஸை சந்தித்த ஜனாதிபதி ரணில்

  • June 23, 2023
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில் உள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்க-சீனா பதட்டங்களை நிவர்த்தி செய்வதை வல்லரசுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். […]

ஐரோப்பா

குழந்தையின் அழுகையை நிறுத்த செய்யும் செயல்; சுவிஸ் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • June 23, 2023
  • 0 Comments

குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்குவது அல்லது ஆட்டுவது, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என சுவிஸ் மருத்துவமனைகள் இரண்டு கூறியுள்ளன. குழந்தையை வேகமாக குலுக்குவது குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் குழந்தை அழும்போது பல பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவற்காக அதை வேகமாக குலுக்கவோ ஆட்டவோ செய்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது குழந்தையின் மூளை, கண்ணின் பின்னாலுள்ள விழித்திரை ஆகிய உறுப்புகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள் சுவிஸ் மருத்துவர்கள். அதனால், குழந்தைக்கு மன நல பாதிப்பு […]

தென் அமெரிக்கா விளையாட்டு

காதலியிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்ட நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்

  • June 23, 2023
  • 0 Comments

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீர்ரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதறத்தில் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது . இதனையடுத்து புருனா பியான்கார்டி-நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வெறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப் பெண் எனவும் வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாக்களிக்க தவறிய 14 ஆயிரம் பேர்!

  • June 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் 14 ஆயிரம் பேர் வாக்களிக்க தவறியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது சரியான புகைப்பட அடையாள அட்டையை தயாரிக்கத் தவறியதால் மேற்படி நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, வாக்காளர்கள் வாக்குச் சீட்டை அனுமதிக்கும் முன் புகைப்பட அடையாளத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட படிவத்தைக் காட்ட வேண்டும். வாக்குச் சாவடிக்குச் சென்ற 0.25% பேர் (தோராயமாக 14,000 பேர்) அவர்களுடைய அடையாளத்தை உறுதிபடுத்த முடியாத […]

You cannot copy content of this page

Skip to content