இலங்கையில் பூமி அதிர்வு – உறுதி செய்த அதிகாரிகள்
மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு (25) 11.20 அளவில், ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.