இலங்கை

மர்த்தனர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பதவியுயர்வு நியமனங்களை வழங்கிய கிழக்கு ஆளுநர்

  • September 27, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடாத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதியாக கலந்து கொண்டு […]

இலங்கை

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஐவர் கைது!

  • September 27, 2023
  • 0 Comments

12 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கடத்திய ஐவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று (27.09) டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கொழும்பை சேர்ந்த வர்த்தகர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும்,  பயணப் பொதிகளிலும் மறைத்து வைத்திருந்த நிலையில், அவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஆசியா

ஈராக்கில் திருமண நிகழ்வின் போது திடீர் தீ விபத்து – 100 பேர் வரை பலி..!

  • September 27, 2023
  • 0 Comments

ஈராக்கில் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் சிக்கி கொண்டனர்.திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற முடியாமல் அவர்கள் திணறினர். மண்டபம் முழுவதும் கரும்புகை பரவியது. இதனால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். […]

இலங்கை

இலங்கையில் சிறுவன் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

  • September 27, 2023
  • 0 Comments

மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள அறையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுவன்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பன்வில – கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன […]

இலங்கை

கனடாவில் இருந்து வருகை தந்த இருவர் மீது மட்டகளப்பில் தாக்குதல்!

  • September 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டள்ள நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்த இருவர் மீது மட்டக்களப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 150 வருடத்தை நிறைவுசெய்யும் முகமாக பல்வேறு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக பல ஐரோப்பிய நாடுகளில் […]

இலங்கை

கண்காணிக்க விசேட குழுவை ஸ்தாபிக்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே

  • September 27, 2023
  • 0 Comments

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தேசிய பொருளாதாரம் […]

இலங்கை

IMF உடனான இறுதி பேச்சுவார்த்தை : இலங்கைக்கு கைக்கொடுக்குமா?

  • September 27, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (26.09) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மீளாய்வு வேலைத்திட்டத்தின் இறுதி கலந்துரையாடல் சுற்று நேற்று இடம்பெற்றது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், உள்ளூர் […]

இலங்கை

சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

  • September 27, 2023
  • 0 Comments

சர்வதேச சைகைமொழி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இலங்கையின் 10மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்ட ஆயிரக்கண்கான சைகைமொழியாளர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலவவுவற்றோர் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகைமொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் என்னும் தொனிப்பொருளில் இன்றைய சர்வதேச சைகைமொழி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்போது மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலவவுவற்றோர் சங்க […]

வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் – தடுக்க தீவிர முயற்சி

  • September 27, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கம் முடங்கும் அபாயம் உள்ள நிலையில் அதனை தடுக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை தற்காலிகச் செலவின மசோதாவை முன்னெடுத்துச் செல்ல வாக்களித்திருக்கிறது. 10 ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போவதைத் தடுக்க 4ஆவது முறை அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. செனட் சபையும் மக்களவையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் மசோதாவை அங்கீகரித்தால் நவம்பர் 17ஆம் திகதி வரை அமெரிக்க மத்திய அரசாங்கத் துறைகள் சிரமமின்றிச் செயல்படலாம். எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் அமெரிக்க அரசாங்கம் அதன் […]

இலங்கை

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா?

  • September 27, 2023
  • 0 Comments

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூட்டத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.