செய்தி

லியோ குறித்து மிகப்பெரிய இயக்குநர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

  • October 1, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லியோ. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் மல்லு கட்டுவது டீசர், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் கௌதம் மேனன் விஜய்க்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படம் சூப்பராக […]

இலங்கை

திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல்

  • October 1, 2023
  • 0 Comments

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது இருந்தும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

மீண்டும் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலைகள் : வெளியான அறிவிப்பு!

  • October 1, 2023
  • 0 Comments

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, திங்கள்கிழமை (02.10) மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்யப்பட உள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) கடந்த மாத விலைச்சீர்திருத்தத்தின் போது, விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை கணிசமான தொகையிலிருந்து அதிகரித்தது. இதற்கிடையில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை திருத்தம் குறித்து வரும்  04ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் […]

ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து -பலர் படுகாயம்

  • October 1, 2023
  • 0 Comments

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயம் அடைந்தனர். ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு ரயில்களில் ஒன்று, நூற்றாண்டு பழமையான பறக்கும் ஸ்காட்ஸ்மேன் ரயிலாகும். இது, மணிக்கு 100 மைல் வேகத்தில் பயணித்த முதல் நீராவி ரயில் […]

பொழுதுபோக்கு

37 வருடங்களுக்கு முன் கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்த விஜயகாந்த்

  • October 1, 2023
  • 0 Comments

சினிமாவில் நுழைந்த விஜயகாந்த்தை பலரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாமல் ஏளனம் செய்து ஒதுக்கிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஏமாற்றங்களை ஏணிப்படியாக ஆக்கி சோதனைகளை உடைத்து சாதனையாக்கி சரித்திரம் படைத்த நடிகராக வந்தார். விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலம் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடித்து அனைத்து மக்களின் கவனத்தையும் பெற்றார். அப்படிப்பட்ட இவருக்கு 37வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் […]

இலங்கை

நீதவான் பதவி விலகல் விவகாரம் – BASL கண்டனம்

  • October 1, 2023
  • 0 Comments

நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) விடுத்துள்ள அறிக்கையிலே​யே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கையை BASL தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவானின் இராஜினாமா இலங்கையில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும் என்று BASL எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, இச்சம்பவம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஆட்கடத்தல் கும்பல் அட்டகாசம் – பொலிஸார் அதிரடி நடவடிக்கை

  • October 1, 2023
  • 0 Comments

ஜெர்மனிய நாட்டுக்குள் அகதிகளாக வந்து சேர்வதற்கு பல நாடுகளில் இருந்து பல விதமான முறையில் மக்கள் தஞ்சம் அடைவது தொடர்பாக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்ற சிரியா நாட்டு மனித கடத்தல்காரர்கள் மீது ஜெர்மனி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றது. 100க்கும் மேற்பட்ட சிரியா நாட்டு அகதிகளை ஜெர்மன் நாட்டுக்கு கடத்தி வந்த சிரயா நாட்டை சேர்ந்த அகதி ஆட்கடத்தல் கும்பல் ஒன்று மீது பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கெண்டுள்ளார்கள். அதாவது ஜெர்மனியின் முக்கிய நகரமான லக்பென் […]

இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

  • October 1, 2023
  • 0 Comments

இலங்கையில் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால், நாட்டு மக்கள் மத்தியில் கடுமையான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் இதனை தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘ 2023 – செப்டம்பர் – பொது நிர்வாக பகுப்பாய்வு மதிப்பீட்டு அறிக்கை’யில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை மட்டுப்படுத்துதல், நாணய மாற்று விகிதங்களை ஸ்திரப்படுத்துதல், இலங்கை மத்திய வங்கியின் இருப்புகளை மீள கட்டியெழுப்புதல் ஆகியவற்றுடன் பொருளாதார ஸ்திரப்படுத்தலில் தற்காலிக முன்னேற்றங்கள் இருந்த போதிலும், இந்த நிலை […]

ஐரோப்பா

நெதர்லாந்து தலைநகரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு அதிகரிக்கப்படும் வரி

  • October 1, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு தொடங்கி, நெதர்லாந்து தலைநகரம் ஆம்ஸ்டர்டாமில் சுற்றுலா வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிக சுற்றுலா வரிகளைக் கொண்ட நகரத்தின் முதல் இடத்தைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்களின்படி, சுற்றுலா வரி 12.5 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நபருக்கு சராசரியாக 175 யூரோ என்ற அறை வீதத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளத. இரவுச் செலவில் 2024 ஆம் ஆண்டளவில் 15.25 யூரோவிலிருந்து 21.80 யூரோவாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வேலை வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • October 1, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒகஸ்ட் மாதத்தில் வேலை வெற்றிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 390,000 வேலை வெற்றிடங்கள் காணப்பட்டதுடன், இந்த எண்ணிக்கை மே மாதத்திலிருந்து 38,000 வெற்றிடங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை வேலை வாய்ப்பு குறைவு 9 சதவீதம் என்றும், இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு வெற்றிடங்களை புகாரளிக்கும் நிறுவனங்களில், மே முதல் ஒகஸ்ட் வரை […]