நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்! சட்டத்தரணி சுகாஷ்
நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று (01.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. சிறீலங்காவின் நீதித்துறை சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கும், அதே மேலாதிக்கத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்தவர்களையும் […]