இலங்கை

எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து உணவின் விலையும் அதிகரிப்பு!

  • October 5, 2023
  • 0 Comments

எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்தார். இதனடிப்படையில், தேநீர் ஒன்றின் விலை  10 ரூபாவினாலும், கொத்து ரொட்டி ஒன்றின் விலை  20 ரூபாவினாலும், பிரைட் ரைஸ்  ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆசியா

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

  • October 5, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ரிங் ஆப் பெயர் என்கிற கடலுக்கு அடியில் எரிமலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியில் ஜப்பான் நாடு அமைந்துள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்று. பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பான் நாட்டில் அவ்வப்போது சுனாமி போன்ற பேரழிவுகள் நிகழ்ந்து வருகிறது. இந்த […]

இலங்கை

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நோய் குறித்து மருத்துவர் எச்சரிக்கை!

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை இந்த நாட்களில் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுவதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார். “தற்போது பெய்து வரும் மழையுடன், சில பகுதிகளில் குளிர் காலநிலையும், வேறு சில பகுதிகள் வெள்ளத்திலும்  மூழ்கியுள்ளன. இதன் விளைவாக பல நோய்கள் வேகமாக பரவுவதை நாங்கள் அவதானித்து வருகிறோம். […]

பொழுதுபோக்கு

விளம்பரத்தில் நடித்ததால் அமிதாப் பச்சனுக்கு ஏற்பட்ட நிலை

  • October 5, 2023
  • 0 Comments

ஆன்லைன் வணிகத் தளமான பிளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ என்ற நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. அதுபோன்று இந்த ஆண்டும் ‘பிக் பில்லியன்டே’ விற்பனைக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் பிளிப்கார்ட்டில் தருவது போன்ற சலுகை சில்லறை விற்பனைக் கடைகளில் நிச்சயம் கிடைக்காது என்று அமிதாப் பச்சன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு […]

இலங்கை

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

  • October 5, 2023
  • 0 Comments

2022/23 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு இன்றுடன் (05.10) முடிவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 14, 2023 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு மேலும் நீடிக்கப்பட மாட்டாது என UGCயின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2022 (2023) உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 232,797 […]

இலங்கை

ரயில் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

  • October 5, 2023
  • 0 Comments

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட புகையிரதப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி  இன்று (05.10) மாலைக்குள் ரயில்களை திறம்பட இயக்கும் பணியில் ரயில்வே திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

  • October 5, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டின்போது, ஸ்கொட்லாந்து முன்னாள் முதல் அமைச்சரான நிக்கோலா ஸ்டர்ஜன் குறித்து கிண்டல் செய்துள்ளார். நிக்கோலா, தான் சார்ந்த கட்சிக்காக நிதி திரட்டியதில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.அது தொடர்பாகவே ரிஷி நிக்கோலாவை கேலி செய்யும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ரிஷியின் […]

ஆசியா

சீனாவில் ரூ.9 லட்சம் பரிசுக்கு ஆசைப்பட்டு குடித்தே உயிரை விட்ட ஊழியர்..!

  • October 5, 2023
  • 0 Comments

சீனாவில் 9லட்சம் ரூபாய் பரிசு பணத்திற்கு ஆசைப்பட்டு அலுவலக விருந்தில், ஒரு லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வித்தியாசமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்குவது சீனர்களுக்கு வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் சென்ஷன் நகரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் சீனா மட்டுமின்றி உலகம் மட்டும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்ஷன் மாகாணத்தைச் சேர்ந்த யாங் என்ற நிறுவன […]

பொழுதுபோக்கு

லியோ படத்தில் இருந்து முதன்முறையாக த்ரிஷாவின் படம் வெளியானது…

  • October 5, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. […]

இலங்கை

வட்டி விகிதங்களை குறைத்த இலங்கை மத்திய வங்கி!

  • October 5, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, துணை நிலை வைப்பு வசதி விகிதத்தை (SDFR) 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. அத்துடன் துணை நிலை கடன் வசதி விகிதத்தை (SLFR) 11 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.