நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரும் முல்லைத்தீவு இளைஞர்கள்!
முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயினை கட்டியவாறு அமைதியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் நீதி அமைச்சின் செயலாளருக்கு கையளிக்க மகஜர் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறல் குடியேற்றம் மற்றும் நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் அத்தோடு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக […]