பொழுதுபோக்கு

சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எகிறிய டிஆர்பி….

  • October 13, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் டாப் சீரியலாக தற்போது மாறி இருக்கிறது சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் அடாவடி ஹீரோ, அப்பாவி மருமகள், வில்லி மாமியார் என கதை பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட மற்ற தொடர்களை டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளிவிட்டது. தற்போது கடந்த வாரத்திற்கான ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. அதில் சிறகடிக்க ஆசை Urban பகுதியில் 10.5 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மேலும் Urban + rural இணைந்து […]

இலங்கை

மட்டக்களப்பு – வாகரையில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு பிரதேச விவசாயிகளிடம் கையளிப்பு

  • October 13, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் வியாழக்கிழமை 12.10.2023 இடம்பெற்றன. “எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்திற்கு அமைவாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்கள் சுமார் 18 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.சுவீடன் […]

ஆசியா

மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ;மலைகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிய மக்கள்

  • October 13, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து, தற்காலிக கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த அக்டோபர் 7ம் திகதி 6.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து தாக்கியது. இதில் ஹீரத் மாகாணத்தில் மட்டுமே 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கு ஆளும் தாலிபான் அரசு அறிவித்திருந்தது. இந்த கோர சம்பவத்தின் நினைவுகள் மறைவதற்கு முன்பாகவே அந்நாட்டில் அடுத்தடுத்து […]

இலங்கை

இலங்கையில் அனைத்து வகை வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்க யோசனை!

  • October 13, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து வகை வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. உரிய கொள்கைளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில் வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முக்கிய செய்திகள்

சீன கடன் செயலிகளால் அதிர்ச்சி – 60 பேர் மரணம்

  • October 13, 2023
  • 0 Comments

சீன கடன் செயலிகள் மூலமாக பலர் கடன் வாங்கி கட்டமுடியாமல் துன்புறுத்தப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர். சீனத் தொடர்புடைய சில செயலிகள் விரித்த கடன் வலையில் பலர் சிக்கி வருகின்றனர். விருதுவாங்கிய இசைக்கலைஞர், இளம் தாய் , இரண்டு மகள்களின் தந்தை, நான்கு பருவ வயதினர் போன்ற பலர் இதற்கு உயிரைப் பறிகொடுத்துவிட்டனர். இந்தியா ஆசியா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கடன் செயலிகள் இயங்கி வருவதாக பிபிசி […]

பொழுதுபோக்கு

‘லால் சலாம்’ தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது

  • October 13, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், […]

செய்தி

காஸாவுக்கு அருகே அதிரடி நடவடிக்கையில் இஸ்ரேல் – குவிக்கப்பட்ட கவச வாகனங்கள்

  • October 13, 2023
  • 0 Comments

இஸ்ரேல் கவச வாகனங்களைக் குவித்து வருவதனால் காஸா வட்டாரத்துக்கு அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு எதிராகப் பெரிய அளவில் தரைவழித் தாக்குதல் விரைவில் தொடங்கக்கூடும். இதற்கிடையே காஸாவில் நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது. அங்கு உணவும் தண்ணீரும் தீர்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டு உலக உணவுத் திட்டப் பிரிவு தெரிவித்தது. பாலஸ்தீன வட்டாரத்தில் உள்ள ஒரே மின்சார நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோய்விட்டது. இப்போது அது மின்-உற்பத்தி இயந்திரங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. இஸ்ரேலியப் பிணையாளிகள் விடுவிக்கப்படும் வரை […]

இலங்கை

யாழில் வீதியொன்றுக்கு அருகில் கிடந்த பெண்ணின் சடலம் – குழப்பத்தில் பொலிஸார்

  • October 13, 2023
  • 0 Comments

யாழில் வீதியொன்றுக்கு அருகில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், ஸ்டெல்லி மாவத்தையில் இந்த இனந்தெரியாத பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 65 வயது மதிக்கத்தக்க 05 அடி 05 அங்குல உயரமும், மெல்லிய உடலும் கொண்ட பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் பழுப்பு நிற சேலை அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழ்வியல்

இதயத்தைக் காக்கும் உணவு முறையும் – வழிமுறைகளும்!

  • October 13, 2023
  • 0 Comments

மனித உயிர் வாழ்க்கைக்கு இதய இயக்கம் மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இயங்க உதவும் பத்து உணவு வகைகளையும், இதய நோய் வராமல் தவிர்க்க உதவும் சில வழிமுறைகளையும் இந்தப் பதிவில் காண்போம். ஒருவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திடீரென மார்புப் பகுதியில் அசௌகரியம் மற்றும் கனம், அழுத்தும் உணர்வுடன் வலி, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், தீவிர பலவீனம் மற்றும் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் […]

ஆசியா

அதிரடி யுக்தியில் ஹமாஸ் – இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

  • October 13, 2023
  • 0 Comments

காஸா போரை நீண்ட நாட்களுக்கு நீட்டிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸை ஒடுக்கும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள போதிலும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. ஹமாஸ் கடந்த 7-ஆம் திகதி தாக்குதலை துவக்கியதில் இருந்து பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1300! இதுதவிர தங்கள் வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மறுபுறம், பாலஸ்தீன தரப்பில் 1203 […]