ஐரோப்பா

பிரான்ஸில் தந்தை தாக்கியதால் பலியான சிறுவன் ; சிறுமி மருத்துவமனையில்

  • July 3, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தனது குடும்பத்தினரை மிக கொடூரமாக கத்தி ஒன்றின் மூலம் தாக்கியதில் 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் Tournan-en-Brie நகரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை(02) பிற்பகல் 3 மணி அளவில் இங்குள்ள வீடொன்றில் இருந்து பெறப்பட்ட தொலைபேசி அழைப்பை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு 6 வயதுடைய சிறுவன் ஒருவனின் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான். அத்தோடு 10 வயதுடைய […]

இந்தியா

மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருந்த கணவர்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

  • July 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், இறந்த தன் மனைவியின் உடலை கணவர் ஃப்ரீஸரில் வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தன் மனைவியைக் கொன்றிருக்கலாம் என உயிரிழந்த அந்தப் பெண்ணின் சகோதரர் பொலிஸில் புகாரளித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த Abhay Tiwari என்பவர், தன் சகோதரியான Sumitriயை, அவரது கணவரான Bharat Mishra கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்.தன் தங்கை உயிரிழந்ததை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருந்தது தனக்கு இன்று காலை தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. ஹமாஸ் போன்ற வேறு சில ஆயுதக் குழுக்கள் காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் செயல்படுகின்றன. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் […]

ஆசியா

ஜப்பானில் கனமழை : மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

  • July 3, 2023
  • 0 Comments

ஜப்பானின் தென்மேற்கு கியூஷு பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதுடன் ஆற்றின்மேல் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  பாதுகாப்பு காரணங்களுக்காக, குமாமோட்டோ நகரில் வசிக்கும் 3,60,000 மக்களை வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஜப்பானில் எதிர்வரும் வாரத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும்,  மண்சரிவு மற்றும் வெள்ளம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

போதைமருந்து பயன்பாட்டால் ஏற்படும் மரணங்களை தடுக்க விசேட கருவி

  • July 3, 2023
  • 0 Comments

போதை மாத்திரை உட்கொள்வதனால் ஏற்படக்கூடிய மரணங்களை தடுக்க விசேட கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த விசேட கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக போதை மாத்திரைகளை உட்கொள்வதனால் சுயநினைவை இழந்து ஆபத்தான நிலைக்குச் செல்லக்கூடிய அல்லது மரணம் சம்பவிக்க கூடிய சந்தர்ப்பங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தனியாக போதை மாத்திரை உட்கொள்ளும் நபர்கள் இந்தக் கருவியை ஆன் செய்துவிட்டு மருந்து உட்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஓர் நேரம் வரையில் […]

இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக டகாஃபுமி கடொனோ நியமனம்

டகாஃபுமி கடொனோ ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளராக கடமையாற்றிய சென் சென்னின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், அந்தப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டகாஃபுமி கடொனோ, ‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான ஒத்துழைப்பை வழங்கும். அதேவேளை, அந்த ஒத்துழைப்புகளினால் இலங்கை மக்கள் பயனடைவார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். 2006ஆம் ஆண்டு […]

இலங்கை

இலங்கை வரும் நாசா குழுவினர்!

  • July 3, 2023
  • 0 Comments

நாசாவின் விஞ்ஞானிகள் குழுவொன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் உள்ள கற்களுக்கும் இலங்கையில் காணப்படும் கற்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த கருத்து வெளியிட்டுள்ள நாசாவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த கருணாதிலக்க,  இலங்கையின் புவியியல் அம்சங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில பாறைகள் மற்றும் மண்ணுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது எனக் கூறினார். இது தொடர்பிலான ஆய்வுகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சூரிய ஒளியைத் தடுக்கும் ஆராய்ச்சி: அமெரிக்காவில் புவி வெப்பமடைவதைக் குறைக்க ஒரு புதிய முயற்சி

“காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது” என்ற ஆராய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், சூரியக் கதிர்கள் புவி வெப்பமயமாதலை துரிதப்படுத்துவதால், அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சிக்கான அனைத்தையும் […]

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

  • July 3, 2023
  • 0 Comments

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகி வெற்றிப்படமாக வசூல் குவித்து வரும் இந்திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், இரண்டாம் நாளில் 5 கோடி ரூபாயை வசூலித்தது தற்போது வரை ரூ. […]

ஆசியா

எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய வர்த்தக தலையீடுகளால் அமெரிக்க டாலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஆசியா முழுவதும் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (3) பிரென்ட் மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீத வீழ்ச்சியாகும். மேலும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் […]

You cannot copy content of this page

Skip to content