இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!
ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் ஜோர்தானுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பெண்களும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டனர். இவர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இது தொடர்பில் இன்றும் (15) நாளையும் (16) துல்லியமான தகவல்கள் தேடப்படும் எனவும் நிமல் பண்டார […]