வட அமெரிக்கா

பாலஸ்தீன சிறுவனை 26 தடவை குத்தி கொலை செய்த அமெரிக்க முதியவர்!

  • October 16, 2023
  • 0 Comments

பாலஸ்தீன சிறுவனை 26 தடவை கத்தியால் குத்தி அமெரிக்க முதியவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது இஸ்லாமிய பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 71 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்துள்ளார். அப்போது, திடீரென வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது மகனையும் […]

மத்திய கிழக்கு

கென்யா- 26 வழக்குகளில் வாதாடி வெற்றி… போலி வழக்கறிஞர் கைது!

  • October 16, 2023
  • 0 Comments

கென்யா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா என்ற போலி வழக்கறிஞரை கென்யா காவல்துறை கைது செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா பகுதியை சேர்ந்தவர் பிரையன் முவெண்டா இவர் அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிரையன் திறம்பட செயல்பட்டதால் அவர் பங்கேற்ற 30 வழக்குகளில் 26 வழக்குகளை திறம்படி வாதாடி வெற்றிப் பெற்றுள்ளார். இந்த நிலையில், சில வழக்கறிஞர்கள் பிரையனின் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு […]

பொழுதுபோக்கு

கமல், கௌதமி பிரிவுக்கு காரணம் என்ன? காலம் கடந்து வெளியாகும் உண்மைகள்…

  • October 16, 2023
  • 0 Comments

கமல் மற்றும் கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன என்பதை செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கௌதமி, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார். நடிகை கௌதமி அண்மைக் காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கௌதமி சினிமா பின்புலம் இல்லாத சாதாரண பெண், திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது, தெலுங்கு இயக்குநர் ஒருவரின் கண்ணில்பட்டு சினிமாவில் அறிமுகமானார். […]

வட அமெரிக்கா

நோபல் பரிசு வென்ற பிரபல பெண் கவிஞர் திடீர் மரணம்…

  • October 16, 2023
  • 0 Comments

நோபல் பரிசு, புலிட்சர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற அமெரிக்காவின் பிரபல பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது இலக்கிய உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். இவரின் […]

இலங்கை

இலங்கையில் மயக்க மருந்தின்றி மூளையில் உள்ள கட்டியை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்!

  • October 16, 2023
  • 0 Comments

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவு நோயாளியின் மூளையிலுள்ள கட்டியை அகற்றும் நடவடிக்கை மயக்க மருந்து இன்றி நோயாளி விழித்திருந்த போது வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பொதுத்துறை வைத்தியசாலை ஒன்றில் முதன்முறையாக இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய சிற்பி ஒருவரே இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது இடது மூளையின் முன்புறம், உடலின் வலது பாதியின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டியை […]

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் கிரிகெட்டை சேர்க்க ஒப்புதல்!

  • October 16, 2023
  • 0 Comments

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று (16.10)  கூடிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்த முடிவின் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டிகள் மேலும் ஈர்ப்பு பெறும் என விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு

கைதான 27இந்திய மீனவர்களை விடுதலை செய்ய கோரி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

  • October 16, 2023
  • 0 Comments

இலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 18ம் திகதி பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம். மேலும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள். ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த […]

இலங்கை

GCE O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • October 16, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

  • October 16, 2023
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராக பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று (16.10) கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், உலக கச்சா எண்ணெய் சந்தைக்கு இது நல்ல செய்தி அல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இலங்கை

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் -பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இஸ்ரேல் -பலஸ்தீன மோதல் காரணமாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கும் நிலைமையினை தடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இஸ்ரேல் -பலஸ்தீன இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானம் […]