ஐரோப்பா

லாட்வியாவிற்று 305 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • July 6, 2023
  • 0 Comments

லாட்வியாவில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த  ஐரோப்பிய ஆணையம்  305 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. 2021-2027 நிதிக் காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறித்த நிதியானது  குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நிதியுதவி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்று, ரயில் பால்டிகா திட்டம். இது லாட்வியாவில் இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து துறையை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 298 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன்  கீழ் லீபாஜா துறைமுகத்தை (Liepaja Sea […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த நடவடிக்கை – தாய் விடுத்த கோரிக்கை

  • July 6, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில் தமது மகன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரீட்டா அருள் ரூபன் எனப்படும் குறித்த பெண் இலங்கையிலிருந்து 2012 ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று தற்காலிக பாதுகாப்பு விசாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வசித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமது மகனை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 200 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் மீண்டும் மக்களின் பார்வைக்கு

  • July 6, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வர்த்தகக் கட்டடம் ஒன்றால் மறைக்கப்பட்டிருந்த தேவாலயத்தை முதல் முறையாக பாரக்க முடிந்துள்ளது. 200 ஆண்டுப் பழைமையான தேவாலயத்தை சுமார் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வீதியில் காண முடிந்துள்ளது. House of Fraser என்ற அந்தக் கட்டடம் 1867ஆம் ஆண்டு Howells என்ற பெயரில் கார்டிஃப் நகரில் திறக்கப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து அந்தக் கட்டடம் விரிவடைந்து Bethany Baptist தேவாலயத்தை மறைத்து விட்டது. கார்டிஃப் நகரில் அதிகரித்த மக்கள்தொகையாலும் கட்டடங்களாலும் அந்தத் தேவாலயத்திற்குச் செல்வது கடினமாக […]

ஐரோப்பா

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : பிரித்தானியா முழுவதும் 20 துப்பாக்கிகள் உள்பட மில்லியன் கணக்கில் போதைப்பொருள் மீட்பு!

  • July 6, 2023
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், £130 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா, ஒரு மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன், மற்றும் 20 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பிரித்தானிய சட்ட அமலாக்கத் துறை வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மேற்கொள்ளப்பட் சோதனை நடவடிக்கையின்போது, 20 துப்பாக்கிகள், £1 மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன் போதைப்பொருள், 6 இலட்சத்து 36 ஆயிரம் பவுண்ட் ரொக்கம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆபரேஷன் மில்லே என்று […]

பொழுதுபோக்கு

தந்தை விஜயகுமார் அத்துமீறுவதாக நடிகை பரபரப்பு புகார்

  • July 6, 2023
  • 0 Comments

கேரளாவைச் சேர்ந்த நடிகை அர்த்தனா பினு தன்னுடைய தந்தை விஜயகுமார் அத்துமீறி வீட்டின் நுழைந்து மிரட்டுவதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்த்தனா பினு மாஸ் கம்யூனிகேஷன் படிக்கும் போதே, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் மாடலிங் செய்ய துவங்கினார். இதைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில். தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சீதா மகாலட்சுமி’ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே ஆண்டு மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் […]

உலகம்

மக்கள் ஜோம்பிஸ் போல் தெரிந்தார்கள் : துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம்!

  • July 6, 2023
  • 0 Comments

டென்மார்க்கில் கடந்த ஆண்டு ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்தை மேற்கொண்ட 23 வயதான இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜோம்பிஸ் போல் தெரிந்ததாகவும், அதனாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை பாதுகாப்பான மருத்துவ வசதியின் கீழ் தடுப்புகாவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோபன்ஹேகனின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஃபீல்ட் […]

வட அமெரிக்கா

கனடாவில் கடும் வெப்பம்! நெருக்கடியில் மக்கள்

  • July 6, 2023
  • 0 Comments

கனடாவின் ரொரன்டோ மற்றும் ஹாமில்டன் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கைக்கு வழங்கப்பட் மேலும் இரு யானைகள் குறித்தும் கவனம் செலுத்தும் தாய்லாந்து!

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வழங்கிய மேலும் இரண்டு யானைகள் குறித்தும் தாய்லாந்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி குறித்த இரு யானைகளின் உடல்நிலைக் தொடர்பில்  ஆராய்வதற்காக செப்டம்பர் மாதத்தில் கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தாய்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாள்

  • July 6, 2023
  • 0 Comments

வரலாற்றில் பதிவான உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 3ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தேசியச் சுற்றுச்சூழல் முன்னுரைப்பு நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது. ஜூலை 3ஆம் திகதியன்று உலகின் சராசரி வெப்பநிலை 17.01 பாகை செல்சியஸாகப் பதிவானது. இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெப்பநிலை ஆக அதிகமாக 16.92 பாகை செல்சியஸாக இருந்தது. உலக அளவில் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. பருவநிலை மாற்றத்தோடு, El Nino எனும் வானிலை நிகழ்வால் […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நச்சுவாயு கசிவு : குறைந்தது 16 பேர் உயிரிழப்பு!

  • July 6, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில்  நச்சு வாயு கசிந்ததன் காரணமாக மூன்று குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு புறநகரில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் அதிகளவு கிடைப்பதால் அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும்போது இவ்வாறான வாயுக்கள் வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் நச்சுவாயு தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் முழுமையாகன தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறும் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

You cannot copy content of this page

Skip to content