ஐரோப்பா

பிரான்ஸில் சமூக இணையத் தளங்களை கட்டுப்படுத்த திட்டமிடும் ஜனாதிபதி!

  • July 7, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மற்றொரு முறை கலவரம் கட்டுமீறிப் பரவுகின்ற நிலைமை உருவானால் சமூக இணையத் தளங்களை ஒழுங்குபடுத்தவோ அல்லது துண்டிக்கவோ வேண்டிவரலாம் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக இணைய ஊடகங்கள் அழிவுச் செயல்களுக்காக ஆட்களைத் திரட்டவும் கொலை செய்வதற்கும் ஒரு கருவியாக மாறுவது உண்மையிலேயே ஒரு பெரும் பிரச்சினை ஆகும் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி நகர மேயர்களுடன் நடத்திய சந்திப்பில் இவ்வாறு எச்சரித்திருக்கிறார். அரசுத் தலைமையின் இந்த அறிவிப்புக்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வலது, இடதுசாரிக் […]

ஆசியா

சீனாவில் அறிமுகமாகும் “வாடகை அப்பா” திட்டம் – அறிய வகை இலவச சேவை ஆரம்பம்

  • July 7, 2023
  • 0 Comments

சீனாவில் ஒரு அறிய வகை சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “Rent a Dad” என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். […]

ஐரோப்பா

ஜெர்மனி கத்தோலிக்க திருச்சபையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அம்பலம்

  • July 7, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருப்பது தற்பொழுது வெளிவந்துள்ளது. 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பேர்ளின் நகரத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் பல பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக தற்பொழுது பாதிக்கபட்டவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். குறிப்பாக 1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மறைமாவட்டத்தில் கடமையாற்றிய 6 மத குருமார்கள் இவ்வகையான துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுப்பட்டதாக பாதிக்கப்பட்ட பலர் தற்பொழுது கருத்து தெரிவித்துள்ளனர். பாலியல் துன்புறுத்துக்கால் பாதிக்கப்பட்ட பலர் தற்பொழுது தங்களது ஆதங்கத்தை தெரிவித்து இந்த விடயத்தை வெளிச்சத்துககு […]

ஆசியா

சிங்கப்பூரில் குறையும் வேலைவாய்ப்புகள் – நெருக்கடியில் ஊழியர்கள்

  • July 7, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த மே மாத நிலவரப்படி வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. மே மாதம் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளதென புதன்கிழமை வெளியான மனிதவள அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் அதனை தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 1.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது மே மாதத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 64,700 பேர் வேலையில்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவர்களில் 56,900 பேர் […]

உலகம்

அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ளும் OceanGate நிறுவனம்!!

  • July 7, 2023
  • 0 Comments

ஓசன் கேட் நிறுவனமானது  தனது அனைத்து செயற்பாடுகளையும் காலவரையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆழ்கடலில் மூழ்கியியுள்ள வரலாற்று பொக்கிஷமான டைட்டானிக்க கப்பலை பார்வையிடுவதற்காக ஓசன் கேட் என்ற நிறுவனம் டைட்டன் என்ற நீர் மூழ்கி கப்பல் மூலம், சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றது. இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் அண்மையில் வெடித்துச் சிதறியது. இதில் அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்களில் நிறுவனத்தின் தலைவரும் ஒருவராவார். இதனையடுத்து இந்த கப்பல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த நிலையிலேயே […]

இலங்கை

இலங்கை வங்கிகளுக்கு மத்திய வங்கியின் விசேட எச்சரிக்கை!

  • July 7, 2023
  • 0 Comments

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் நன்மைகளை பொது மக்களுக்கு பெற்றுத்தராத வங்கிகள் தொடர்பில் தேவையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த […]

செய்தி மத்திய கிழக்கு

வெறுப்புப் பேச்சு காணொளியை வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை!! நாடு கடத்தவும் உத்தரவு

  • July 6, 2023
  • 0 Comments

அபுதாபி குற்றவியல் நீதிமன்றம், வெறுக்கத்தக்க காணொளியை ஆன்லைனில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் அபராதம் விதித்துள்ளது. தண்டனை முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிராக ஆண்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களை இழிவுபடுத்தும் சொற்றொடர்களைக் கொண்ட காணொளியை அந்தப் பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் செய்ய பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை பறிமுதல் […]

செய்தி வட அமெரிக்கா

பெண்ணின் உடலை பாதுகாத்து மீட்பு பணியாளர்களுக்கு சவால் விடுத்த முதலை

  • July 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கோல்ஃப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளம் அருகே தனது நாயுடன் நடந்து சென்ற பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை முதலை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், முதலை அந்த பெண்ணின் உடலைக் காத்து, மீட்பவர்களை நெருங்க விடாமல் தடுத்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பதிலளிக்காத பெண்ணை தண்ணீருக்கு அருகில் கண்டனர். பெண்ணின் உடலைப் பாதுகாத்து, மீட்புப் பணியை விளக்கிக் கொண்டிருந்த முதலை அவர்களை எதிர்கொண்டது. முதலை அகற்றப்பட்டதும், மீட்பு […]

இலங்கை செய்தி

மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து திட்டமிடப்பட்ட கொலை என அம்பலம்

  • July 6, 2023
  • 0 Comments

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (4) மாலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பட்டா ரக வாகனத்தினால் மோதுண்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து திட்டமிட்ட கொலை என செய்திகள் வெளியாகி உள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரும்,உயிலங்குளம் கால்நடை வைத்திய அலுவலகத்தில் கடமையாற்றும் செபமாலை சிறிதரன் (வயது 55 )என தெரிய வந்துள்ளது. மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் நொச்சிக்குளம் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்த கோரி போராட்டம்

  • July 6, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு தெரிவித்து இறால் பண்னணக்கு முன்னால் இன்று நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம், இறாலோடை ஆகிய மீனவ அமைப்புக்கள் இணைந்து குறித்த இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து இன்று காயன்கேணி பழைய பாலத்துக்கு அருகில் 50 க்கு மேற்பட்ட மீனவர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து அசுத்தப்படுத்தாதே வாவி […]

You cannot copy content of this page

Skip to content