பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 70 அகதிகள் சுற்றிவளைப்பு
பிரித்தானியா நோக்கி பயணித்த 70 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பல்வேறு சிறிய படகுகளில் சென்றவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் திங்கட்கிழமை காலை வரை அடுத்தடுத்து பல்வேறு படகுகளில் பா து கலே கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியா நோக்கி அவர்கள் பயணித்துள்ளனர். சிறிய பாதுகாப்பில்லாத படகுகளில் அவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீட்டு, கரைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் மட்டும் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு 100,000 அகதிகளுக்கு மேல் கடல்மார்க்கமாக […]