தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்
ரிக்டரில் 6.3 அளவிலான நிலநடுக்கம் பிலிப்பீன்சை உலுக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தென் பிலிப்பீன்சுக்கு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. டவாவ் தீவின் கிழக்குப் பகுதிக்கு சுமார் 374 கிலோமீட்டருக்கு அப்பால் அதிக ஆழமில்லாத நிலநடுக்கம் உலுக்கியதாக யுஎஸ்ஜிஎஸ் குறிப்பிட்டது