மத்திய கிழக்கு

ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

  • October 19, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி போரில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. கடந்த 7ம் திகதி இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடரும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக, வடக்கு காஸாவை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். காஸாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால் அகதிகளாக […]

ஐரோப்பா

உக்ரைன் மீது ரஷ்யா இரவோடு இரவாக வான்வழித் தாக்குதல்

கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு உக்ரைனில் உள்ள இலக்குகள் மீது ரஷ்யப் படைகள் இரவோடு இரவாக புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கிய்வ் இராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. உக்ரேனியப் படைகள் மூன்று ஆளில்லா விமானங்களையும் ஒரு கப்பல் ஏவுகணையையும் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. . பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள் உட்பட 17 வெவ்வேறு ஆயுதங்கள் தொழில்துறை, உள்கட்டமைப்பு, பொதுமக்கள் மற்றும் இராணுவ பொருட்களை தாக்க பயன்படுத்தப்பட்டதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம் பொழுதுபோக்கு

ப்ரீ புக்கிங்கில் மட்டும் எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா?

  • October 19, 2023
  • 0 Comments

தளபதி விஜயின் ‘லியோ’ திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும், எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும், இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, […]

ஆசியா

ஜப்பானில் லொறியுடன் நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்து: 18 மாணவர்கள் படுகாயம்

  • October 19, 2023
  • 0 Comments

ஜப்பானில் பள்ளி பேருந்து மீது லொறி மோதிய விபத்தில் 18 மாணவர்கள் வரை படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானில் மேற்கு நகரான நராவில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக் கொண்டு சென்ற பள்ளி பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. கசிகரா நகரின் நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து சென்று கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லொறி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.இதில் பள்ளி குழந்தைகள் 18 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

ஐரோப்பா

இஸ்ரேலைச் சென்றடைந்தார் ரிஷி சுனக்!

  • October 19, 2023
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதமர்  ரிஷி சுனக் இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளதாக கூறினார். அவர் மற்ற பிராந்திய தலைநகரங்களுக்குச் செல்வதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. காசாவை தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய ஹமாஸ் ஆயுததாரிகள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7 அன்று நடத்திய தாக்குதலின் விளைவாக இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சுனக் தனது இரங்கலைப் பகிர்ந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது,

இலங்கை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கதிர்காமம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் ஒரே இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தெபரவெவ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

மத்திய கிழக்கு

சிரியாவில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!

  • October 19, 2023
  • 0 Comments

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு ஆதரவான லெபனான் தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த தகவலை வெளியிட்டது. சிரியாவில் ஈராக் மற்றும் ஜோர்டான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ தளம் மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளம் ஆகியவை இவ்வாறு தாக்கப்பட்டன. ஆனால் இந்த தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாக யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

உலகம்

பணியாளர்களை குறைக்கும் நோக்கியா நிறுவனம் : வேலையை இழக்கவுள்ள 14 ஆயிரம் பேர்!

  • October 19, 2023
  • 0 Comments

ஃபின்னிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா  வட அமெரிக்காவில் 5G உபகரணங்களுக்கான தேவை குறைவதால்   14,000 வேலைவாய்ப்புகளை  குறைப்பதாக தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றுநோயிற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நோக்கியாவும் சேர்ந்துள்ளது. “மூன்றாம் காலாண்டில் மேக்ரோ பொருளாதார சவால்களிலிருந்து எங்கள் வணிகத்தில் அதிகரித்த தாக்கத்தை நாங்கள் கண்டோம்” என்று தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நோக்கியாவின் சேமிப்புத் திட்டம் ஊழியர்களை 72,000 ஆகக் […]

உலகம்

படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர்க்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது

கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் உள்ள Lycée Gambetta உயர்நிலைப் பள்ளியில, 20 வயது பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது Arras நகரின் பேராலயத்தில் நடைபெறும் இறுதித் திருப்பலியில் அதிபர் d’Emmanuel Macron, பிரான்சின் முதல் பெண்மணி Brigitte Macron மற்றும் தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 57 வயது பேராசிரியர் Dominique Bernard அவர்களின் பேராசிரியர் பணியை பாராட்டி […]

இலங்கை

கொழும்பின் பலப் பகுதிகளுக்கு நீர்வெட்டு!

  • October 19, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (21.10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை […]