பேசல் விமான நிலையத்தில் குண்டு அச்சுறுத்தல்
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ள பேசல் முல்க்ஹவுஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு தொடர்பாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. குண்டு அச்சுறுத்தல் காரணமாக விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டு இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக விமான நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு அச்சுறுத்தல் பொய்யானது என கண்டறியப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு போலியாக குண்டு பீதியை ஏற்படுத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என விமான நிலைய நிர்வாகம் […]