புகைப்பட தொகுப்பு

LEOவின் தங்கச்சி எலிசா தாஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்….

  • October 22, 2023
  • 0 Comments

கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை. அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார். எனினும் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் லியோ. இதில் லியோவுக்கு தங்கையாக ஒரு சிறு காட்சிக்கே தோன்றும் இவரது நடிப்பு […]

இந்தியா மத்திய கிழக்கு

காசாவுக்கு மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா

  • October 22, 2023
  • 0 Comments

இஸ்ரேல் ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருந்து மற்றும் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் மாஸ் இடையேயான போர் வலுத்து வருவதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் இரு நாடுகளிலும் உயிரிழந்து உள்ள நிலையில், ஏராளமானோர் மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இன்றி காசா பகுதியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவி வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில் இந்திய அரசு சார்பில் […]

ஆசியா

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 22, 2023
  • 0 Comments

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று (22.10) 6.1 ரிக்டர் அளவில் சிக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாடிங் மாவட்டத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பாக்மதி மற்றும் கண்டகி மாகாணங்களின் பிற மாவட்டங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. திபெத்திய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் முகடுகளில் அமைந்துள்ள நேபாளத்தில் நிலநடுக்கங்கள் பொதுவானவை மற்றும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மீட்டர்கள் முன்னேறுகின்றன.

இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் தற்போது டுபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோனின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ என்ற 43 வயதுடைய பெண் ஒருவர் சப்புகஸ்கந்த மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ICE போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் 506 கிராம் ஹெரோயின், ரூ. 200,000 பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி.என்பவற்றை போலீசார் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் […]

இலங்கை

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடி ;யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்சரிக்கை!

  • October 22, 2023
  • 0 Comments

விளையாட்டு செயலிகள்(apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கிக் கொண்ட பலர் உள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டுச் செயலிகளில் இணைந்து கொள்வோர் அங்கு ஒரு சிலரைக் கொண்ட குழுவாக்கப்படுகின்றனர். அதில் இணையும்போது ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குக்கு வழங்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றனர். அந்த குழுவில் […]

பொழுதுபோக்கு

“ஜெயிலர் வசூலை ‘லியோ’ பீட் செய்து விட்டால் மீசையை எடுத்து கொள்கிறேன்” மீண்டும் சர்ச்சை

  • October 22, 2023
  • 0 Comments

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ படம் சக்கை போடு போட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்படம் லவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் எந்த தொய்வும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘லியோ’. இப்படம் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. அந்த வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் ‘லியோ’ ரிலீசுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ’ பட வசூல் கண்டிப்பாக ஜெயிலரை முந்தாது. நான் ஒரு […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலின் வடப்பகுதியில் உள்ள 14 சமூகங்களை வெளியேற்ற உத்தரவு!

  • October 22, 2023
  • 0 Comments

நாட்டின் வடக்கில் உள்ள மேலும் 14 சமூகங்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியேற்ற உத்தரவுக்கு உட்பட்ட சமூகங்களின் பட்டியலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அங்கீகரித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு காஸாவில் போர் வெடித்ததில் இருந்து அப்பகுதி எல்லை தாண்டிய கடுமையான துப்பாக்கிச் சூடுகளை கண்டுள்ளது. ஹமாஸுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிகளான  ஹிஸ்பொல்லாவுடன் ஒரு சாத்தியமான சண்டைக்கு இஸ்ரேல் தயாராகி […]

இலங்கை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்க துரித நடவடிக்கை!

  • October 22, 2023
  • 0 Comments

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வெளிநாட்டுக் கடனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக […]

இலங்கை

இலங்கையில் ஒரே குடும்பத்தை இலக்குவைத்து துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்!

  • October 22, 2023
  • 0 Comments

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் நேற்று (21.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் நான்கு மாதக் குழந்தை காயமடைந்துள்ளனர். நேற்றிரவு 07.30 அளவில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் உரகஹா வீதியில் உள்ள கல்வெஹெர பாடசாலைக்கு அருகில் […]

இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா-மஸ்தான் MP-ன் செயல்பாடு குறித்து விசனம்

  • October 22, 2023
  • 0 Comments

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.இவ்விடையம் தொடர்பாக […]