ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போது டுபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோனின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ என்ற 43 வயதுடைய பெண் ஒருவர் சப்புகஸ்கந்த மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ICE போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரிடம் 506 கிராம் ஹெரோயின், ரூ. 200,000 பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி.என்பவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)