செய்தி

உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிய இஸ்ரேலியர்கள்

  • October 24, 2023
  • 0 Comments

இஸ்ரேலியர்கள் உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். ஹமாஸ் படையினர் தாக்குதலுக்கு அஞ்சி தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டரேட் நகரில் ஒட்டு மொத்த மக்களும் வெளியேறிவிட்டதால் அந்நகரம் ஆளரவமற்று காட்சி அளிக்கிறது. காசாவுக்கு மிக அருகில் அந்நகர் அமைந்துள்ளதால், ஹமாஸ் படையினர் ராக்கெட் தாக்குதல் ஆபத்து உள்ளதாக கூறி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து வீடுகள், வாகனங்கள், உடமைகளை அப்படியே விட்டுவிட்டு மக்கள் சென்றுள்ளனர். இதனால் தெருக்கள் அனைத்திலும் மயான அமைதி நிலவுகிறது. இஸ்ரேல் மற்றும் […]

பொழுதுபோக்கு

முதன் முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா… லேட்டஸ்ட் அப்டேட்

  • October 24, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படம் கொடுத்த வெற்றியில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன், சிம்பு படங்களை தயாரிக்கவுள்ளார். நடிகராக தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது- படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து […]

பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் கொளுத்திய நெருப்பு… தமாசு நடிகரை விட்டுச் சென்ற மனைவி…

  • October 24, 2023
  • 0 Comments

பல ஆண்டுகால நண்பரே தமாசு நடிகர் மீது பழி சுமத்திய நிலையில், தற்போது தமாசு நடிகரின் மனைவி அவர் கூட இல்லை என்கிற அடுத்த அணுகுண்டை கோடம்பாக்கத்தில் போட்டுள்ளனர். கடைசியாக மகனின் பிறந்தநாளை கொண்டாடும் போது கூட எப்போதோ எடுத்த புகைப்படங்களையே நடிகர் போட்டிருந்தார் என்றும் சமீபத்தில் போடப்பட்ட பூஜையிலும் மனைவியை காணவில்லையே பார்த்தீர்களா? என நெருப்பை கொளுத்திப் போட்டுள்ளனர். அந்த விஷயத்தில் இருந்து எஸ்கேப் ஆக நடிகர் பணத்தை செலவிட்டு வருவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்து […]

முக்கிய செய்திகள்

இஸ்ரேல் தலைநகருக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி

  • October 24, 2023
  • 0 Comments

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வருகை தந்துள்ளார். காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தனி தனியே இஸ்ரேலுக்கு சென்று அலோசனை நடத்தியதோடு, தங்களது முழு ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர். அந்த வகையில், தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் டெல் […]

செய்தி

பிரித்தானியாவில் மருத்துவமனை வாசலில் 28 மணி நேரம் காத்திருந்த அம்பியுலன்ஸ்

  • October 24, 2023
  • 0 Comments

பிரித்தானியா – வேல்ஸில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே அம்பியுலன்ஸ் ஒன்று நோயாளியுடன் 28 மணி நேரம் காத்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது சுவான்சீயில் இருக்கும் மொரிஸ்டன் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தாமதத்தால் அவ்வாறு நேர்ந்தது. அதன் விளைவாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே 16 அவசர மருத்துவ உதவி வாகனங்கள் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையின் மற்ற பிரிவுகளில் தாமதம் ஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைப் பிரிவிலும் நோயாளிகளைக் கவனிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனை ஊழியர்களால் நோயாளிகளுக்குத் […]

இலங்கை

இலங்கையில் மின்சார வாகன இறக்குமதி தொடர்பில் வெளிவந்த தகவல்

  • October 24, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதில், மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்துவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் குறுகிய அரசியல் நோக்கங்களினால் இந்த நடவடிக்கையை மீளப்பெற முடியாது எனவும் […]

பொழுதுபோக்கு

‘ஜப்பான்’ படத்தில் கார்த்தி பாடியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது

  • October 24, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்… தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான டச்சிங் டச்சிங் பாடல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அனு இம்மானுவேல் கவர்ச்சியை வாரி இறைத்து கார்த்தியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலை நடிகர் கார்த்தி இந்திரவதி சௌஹானுடன் சேர்ந்து பாடியுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். […]

வாழ்வியல்

உடல் எடை குறைவாக இருப்பதன் காரணங்கள் என்ன?

  • October 24, 2023
  • 0 Comments

உடல் எடை மிகப் பருமனாக இருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்கப் பல மருத்துவர்களையும் உடற்பயிற்சி மையங்களையும், நியூட்ரிஷன்களையும் அணுகுகிறார்கள். அதற்கு பல ஆயிரங்கள் செலவிடவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் ஒரு பக்கம் இருக்க, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்று உடல் எடையை அதிகரிக்க வகை வகையான உணவுகளையும், மருத்துவர்களையும் சென்று பல ஆயிரங்கள் செலவிடும் மக்களும் உள்ளனர். அப்படிப்பட்ட மக்களுக்கு, உடல் எடை குறைவாக இருப்பதற்கான சில முக்கிய காரணங்களைப் பார்ப்போம். […]

இலங்கை

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பு

  • October 24, 2023
  • 0 Comments

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணமொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பினை வழங்கும் முறை ஒன்றினை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 60 வயது அல்லது அதற்கு கூடுதலான வயதுடைய மற்றும் வருடாந்த வருமானம் 1,200,000க்கும் அதிகரிக்காத சிரேஷ்ட பிரஜைகள் மீளளிப்பினை பெற தகுதியுடையவர்கள் என […]

பொழுதுபோக்கு

லியோ “Ordinary Person” லிரிக்கல் வீடியோ வெளியானது

  • October 24, 2023
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘லியோ’. மேலும் ஜெயிலர் படத்தின் வசூலையே பின்னுக்கு தள்ளும் அளவிற்க்கு, 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆயுத பூஜை ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். லியோ படத்தில் அனிரூத் இசையில், ஜோனிதா காந்தியின் காந்த குரலில் […]