இலங்கை

யாழ். வைத்தியசாலைக்குள் மது போதையில் உள்நுழைய முற்பட்ட இருவர்- கைது செய்த பொலிஸார்

  • October 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு வளாகத்துக்குள் உள்நுழைந்தனர். விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் குளிர்காலத் திட்டம் வெளியானது : உக்ரைனுக்கு காத்திருக்கும் நெருக்கடி!

  • October 25, 2023
  • 0 Comments

ரஷ்ய இராணுவம் புதிய, நீண்ட தூரம் செல்லக்கூடிய ஆளில்லா விமானங்களை முதன்முறையாக   தாக்குதலில் பயன்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹெட்ஸை விட இடல்மாஸ் ட்ரோன்களைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்துவது கடினம். ஈரானில் தயாரிக்கப்பட்ட  இவ்வகையான ட்ரோன்கள் ரஷ்ய தாக்குதல்களில் பிரதானமாக மாறியுள்ளது. இந்நிலையில் இவ்வகையான ட்ரோனை பயன்படுத்தி கீய்வ் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ட்ரோன்கள், குளிர் காலநிலை நெருங்கும்போது உக்ரேனிய உள்கட்டமைப்புக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கான ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு […]

இலங்கை

பதவிகளை பரிமாறிக்கொள்வதால் பயனில்லை : நாமல் கருத்து!

  • October 25, 2023
  • 0 Comments

அண்மையில் இடம்பெற்றது அமைச்சரவை மாற்றம் இல்லை எனவும், பதவிகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும், இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (25.10) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மக்களுக்கு நன்மை செய்ய 2030 வரை காத்திருக்க முடியாது எனவும் கூறினார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம் சமர்பிக்கப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் கூட ஜனாதிபதி இந்நாட்டு மக்களுக்கான நிவாரணத் திட்டத்தை […]

பொழுதுபோக்கு

விடாமுயற்சி படக்குழுவினருக்கு அஜித் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

  • October 25, 2023
  • 0 Comments

விடாமுயற்சி’ படப்பிடிப்பு தளத்தில் அதன் கலை இயக்குநர் அகால மரணமடைந்ததை அடுத்து, படக்குழுவினர் அனைவருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மேற்கொள்ள படத்தின் நாயகன் அஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். வீரம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. மகிழ்திருமேனி இயக்கத்தில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அஜர்பைஜான் தேசத்தில் அப்படி நடைபெற்ற படப்பிடிப்பில், எதிர்பாரா விதமாக நேரிட்ட துயரம் அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரையும் உலுக்கி உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் […]

ஐரோப்பா பொழுதுபோக்கு

33 வருஷத்துக்குப் பின் குருவுடன் இணைந்த சிஷ்யன் – தலைவர் வெளியிட்ட செய்தி

  • October 25, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் நடித்து வரும் நிலையில், அதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நடைபெற்றன. இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்ற நிலையில், அங்கே அமிதாப் பச்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், 33 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றப் போவதை நினைக்கும் போதே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறேன் […]

இலங்கை

பெண்களுக்கு இரவுப் பணி: அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை

  • October 25, 2023
  • 0 Comments

தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் […]

ஆசியா

பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி : இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

  • October 25, 2023
  • 0 Comments

பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி தென்கிழக்கு கடற்கரையில் நுழைந்துள்ளதால், கிட்டத்தட்ட 2 இலட்சத்து 75 ஆயிரம் பேர் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த சூறாவளி காரணமாக இதுவரை இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் 10 பேர் காயமடைந்த நிலையில்,  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார். வங்காளதேச வானிலை துறை நிபுணர் முஹம்மது அபுல் கலாம் மல்லிக் கூறுகையில், புதன்கிழமை அதிகாலையில் சிட்டகாங் மற்றும் […]

இலங்கை

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை கிடைக்குமா? : முக்கிய கலந்துரையாடல் இன்று!

  • October 25, 2023
  • 0 Comments

பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பில் இன்று (25.10) இடம்பெறும் துணை அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டால், அடுத்த வாரத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகமையத்தில் நேற்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது 10 மாவட்டங்களில் தோட்டப்பகுதிகளில் சுமார் இரண்டு […]

இலங்கை

இந்தியாவின் எதிர்ப்பினையும் மீறி இலங்கைக்கு வந்த ஷி யான் 6 ஆய்வு கப்பல்!

  • October 25, 2023
  • 0 Comments

சீன ஆராய்ச்சிக் கப்பலான ‘ஷி யான் 6’ இன்று (25.10) இலங்கைக்கு துறைமுக சேவையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதன்படி,  குறித்த கப்பலானது இன்று பிற்பகலில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. எவ்வாறாயினும், அக்டோபரில் சீனா துறைமுக அழைப்பை நாடிய போதிலும், ஷி யான் 6 இங்கு நவம்பரில் கப்பல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டதாக இந்த மாத தொடக்கத்தில் அமைச்சர் சப்ரி தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்த கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு […]

வட அமெரிக்கா

கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ;2 குழந்தைகள் உட்பட் ஐவர் பலி!

  • October 25, 2023
  • 0 Comments

கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், அங்குள்ள […]