2,500 உழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கவுள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் தொடர்கிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இணைந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 42,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. […]