இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

  • October 31, 2023
  • 0 Comments

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி  1977 க்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது. அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகளையும் இதே தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அரிசிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டுப்பாட்டு […]

ஆசியா

மலேசியாவில் காருக்குள் உறங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • October 31, 2023
  • 0 Comments

மலேசியாவில் நபர் ஒருவர் காரோடு நடுக்கடலில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலாக்கா (Malacca) மாநிலத்திலுள்ள கிளேபாங் (Klebang) நகரின் கடற்கரையில் அலைப்பெருக்கின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூக்கக் கலக்கத்தில் இருந்த அந்த 38 வயது நபர் ஒருவர் ஓய்வெடுப்பதற்காகக் கடற்கரையின் முன்பாகக் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரின் கை பிரேக்கை எடுத்துவிட அவர் மறந்ததால் கடல் நீர்மட்டம் அதிகரித்த போது அது மலாக்கா நீரிணைக்குள் சென்றுவிட்டது. கடந்த 28ஆம் திகதி அதிகாலை 5 மணிக்குக் […]

ஐரோப்பா

ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம்… லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

  • October 31, 2023
  • 0 Comments

ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசு வழங்கும் நிகழ்வின்போது மேடைக்கு வந்த ஸ்பெயின் வீராங்கனை ஜெனி ஹொ்மோசோவுக்கு, லூயிஸ் முத்தம் கொடுத்தார். இந்த விவகாரம் சா்வதேச அளவில் இது சா்ச்சையானது. […]

பொழுதுபோக்கு

கள்ளக்காதலுக்கு மாமா வேலை பார்த்த ஒல்லி நடிகர்.. பாடகருக்கு ஏற்பட்ட நிலை

  • October 31, 2023
  • 0 Comments

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அசுர வளர்ச்சி அடைந்த ஒல்லி நடிகர் ஒருவர், பிரபல பாடகரின் மனைவிக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார். அந்த பாடகர் தனக்கு ரசிகையாய் இருந்தவரை ஐந்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான பிறகு அவருக்கு ஷூட்டிங் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. உடனே அந்த பாடகர் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஒல்லி நடிகரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் மீது […]

பொழுதுபோக்கு

தமிழ்நாட்டில் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது ஜெயிலர் தான்.. அப்ப லியோ???

  • October 31, 2023
  • 0 Comments

ஜெயிலர் படத்துக்கு அடுத்த இடத்தில்தான் லியோ திரைப்படம் இருப்பதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. விஜய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த லியோ தளபதி ரசிகர்களை ரொம்பவே திருப்திப்படுத்தியிருக்கிறது. விமர்சன ரீதியாக லியோ பலத்த அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார். முதல் வார முடிவில் 461 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வ […]

செய்தி

மட்டக்களப்பில் 11 பிள்ளைகளின் தந்தையின் சடலம் மீட்பு

  • October 31, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கி உயிரிழந்தவர் 11 பிள்ளைகளின் தந்தை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர் எனத் தெரியவருகிறது. அதிக மது போதையுடன் காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காத்ததான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

டேய் என்னடா பண்ணுற? ஐஸூவை பார்ட் பார்டாக வர்ணிக்கும் நிக்சன்

  • October 31, 2023
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 7ல் நிக்சனும், ஐஷுவும் முத்தம் கொடுத்துக்கொண்டதை சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் முதலில் பங்கேற்றனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, விஜய் வர்மா உள்ளிட்டோ எவிக்ட் செய்யப்பட்டனர். அதன் பிறகு வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் கானா பாலா, தினேஷ், அன்னபாரதி, அர்ச்சனா, டிஜே பிராவோ ஆகிய ஐந்து பேரும் உள்ளே வந்தனர். பிக்பாஸ் வீட்டில் நிக்சனும், ஐஷுவும் […]

வாழ்வியல்

இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்!

  • October 31, 2023
  • 0 Comments

சிறுநீரில் யூரிக் அமிலம் அறிகுறிகள்: தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் இன்று மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். யூரிக் அமிலப் பிரச்சனையும் இவற்றில் ஒன்று. யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான கழிவுப் பொருளாகும். பொதுவாக, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். ஆனால் சில நேரங்களில் உடலில் யூரிக் அமிலம் அதிக அளவு உடலில் தங்கிவிடுகிறது. இது பல உடல் […]

உலகம்

காசாவின் வடக்கு நகரத்தை இருபுறமும் சூழ்ந்து தாக்கும் இஸ்ரேலின் பீரங்கிப்படைகள்

  • October 31, 2023
  • 0 Comments

காசாவின் வடக்குப் பகுதி நகரத்தை இஸ்ரேலின் பீரங்கிப் படைகள் இருபுறம் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. பாலஸ்தீன நிலத்தில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய மூன்றாவது நாளில் , அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக, தலையிடக் கோரி பாலஸ்தீனம் உலக நாடுகளிடம் பலமுறை முறையிட்டுள்ளது. இஸ்ரேல் சுமார் 600 தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது. நான்கு முக்கியமான ஹமாஸ் தளபதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. கட்டடங்கள் , சுரங்கங்களில் மறைந்து இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் தொடுத்து […]

இலங்கை

கொழும்பு – லாகூருக்கு இடையில் வாராந்தம் 4 விமான சேவைகள்

  • October 31, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையே வாராந்திர நான்காவது விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் அன்றும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.