இலங்கை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

  • November 1, 2023
  • 0 Comments

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மற்றும் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன கிளை, அதன் தலைவர் சேத்திய பண்டார ஏக்கநாயக்க, செயலாளர் பண்டார அரம்பேகும்புர மற்றும் பலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக  எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம், பிரதமர் மற்றும் அமைச்சரவை […]

பொழுதுபோக்கு

சில்லுனு ஒரு காதலை அழுது கெடுத்த ஜோதிகா…. இது என்ன புது கதையா இருக்கு

  • November 1, 2023
  • 0 Comments

ஜோதிகாவின் அழுகை சில்லுனு ஒரு காதலை கெடுத்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே, காக்க உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது அந்தப் படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து அவளை இழந்திருக்கும் ஹீரோவுக்கும், காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்தும் பொலிவியா!

  • November 1, 2023
  • 0 Comments

காஸா பகுதியில்  இடம்பெற்று வரும் “கடுமையான இராணுவ நடவடிக்கைகள்” காரணமாக இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை நிறுத்த பொலிவியா முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவியாவின் துணை வெளிவிவகார அமைச்சர் ஃப்ரெடி மாமணி, தனது நாடு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும், முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதிக்கு தேவையான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய கடுமையான போர் சூழல் காரணமாக இஸ்ரேலுடனான உறவை துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக பொலிவியா காணப்படுகிறது. இதற்கிடையில், கொலம்பியா மற்றும் […]

இலங்கை

ஹட்டன் – பலாங்கொடை போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளது!

  • November 1, 2023
  • 0 Comments

ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியில் மண் மற்றும் கற்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை தெதனகல காப்புப் பிரதேசத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வீதியில் மரத்தென்ன வத்தை பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு மண் மற்றும் கற்கள் வீழ்ந்துள்ளன. இதனால், அந்த சாலையில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தெதனகல காப்புக்காடு ஊடாக ஹட்டன் பலாங்கொட பிரதான வீதியில் […]

இந்தியா

நடுவீதியில் வைத்து பொலிஸ் அதிகாரியை நையப்புடைத்த கும்பல்!-வைரலான வீடியோ

  • November 1, 2023
  • 0 Comments

பொலிஸ் அதிகாரி ஒருவரை கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை சாலையில் வைத்து ஒரு கும்பல் கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அடி பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, கையை வைத்து முகத்தை மறைத்தும் அவர் முகத்தில் அவர்கள் குத்துவதையும், கால்களால் மிதிப்பதும் அந்த வீடியோவில் பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மஹோபா […]

இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்!

  • November 1, 2023
  • 0 Comments

ரஷ்ய விமான சேவை இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று புதன்கிழமை (01) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மிகப் பெரிய விமான சேவையான அசூர் ஏர் (Azur Air) இந்த சேவைகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 332 பயணிகளுடன் முதலாவது நேரடி விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கண்டிய நடனத்துடன் […]

இலங்கை

மீண்டும் ஆரம்பமானது காரைநகர் – யாழ்ப்பாணம் வரையான பேருந்து சேவை

  • November 1, 2023
  • 0 Comments

காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் 785/1 பேருந்து சேவை இன்று ஆரம்பமானது கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி […]

வட அமெரிக்கா

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்; ராஜினாமா செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர்

  • November 1, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 […]

இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன!

  • November 1, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி டெண்டனர் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள்

  • November 1, 2023
  • 0 Comments

சம்பள உயர்வு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர்.நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் இன்று 01-11-23. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார்கள் அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களும் காலை ஏழு மணி தொடக்கம் 12:00 மணிவரை தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையில் குதித்துள்ளார்கள் . முல்லை தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, வெலிஓயா,ஒட்டி சுட்டான், மல்லாவி, […]