இலங்கை

பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சையில் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள் தான் : ஜனநாயக போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள் தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இன்று (04.11.2023) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. சீனா போன்ற ஒரு […]

விளையாட்டு

தொடர்ந்து 3 சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா

  • November 4, 2023
  • 0 Comments

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா உலக கோப்பை தொடரில் 3 சதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 401 குவித்தது. அதிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டினார். அவர் 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 108 எடுத்தார். […]

பொழுதுபோக்கு

மெய் மறந்து முத்தம் கொடுத்த சிம்பு.. அமைதியாக நின்ற த்ரிஷா… VTV கிசு கிசு

  • November 4, 2023
  • 0 Comments

முத்த காட்சி ஒன்றில் இயக்குநர் கட் சொல்லியும் நடிகர் சிம்பு நடிகைக்கு மெய் மறந்து முத்தம் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகரும், சினிமாவின் மூத்த பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை, நடிகர்கள் பற்றி பல அந்தரங்கமானா விஷயத்தை யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அப்படி பல சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி பல பிரச்சனையிலும் தானா சென்று மாட்டிக்கொண்டுள்ளார். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றில், பயில்வான் ரங்கநாதன் […]

ஐரோப்பா

ரஸ்யாவுடன் போர் : உக்ரைனில் ஜனாதிபதி தேர்தல்…!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அடுத்த வசந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் “நன்மை மற்றும் தீமைகளை” பரிசீலித்து வருவதாக அவரது வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த இளவேனிற்காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஸ்யாவுடன் போர் இடம்பெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்துவது பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அடுத்த வசந்த காலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களும் யுத்தம் தொடங்கியதில் இருந்து நடைமுறையில் உள்ள […]

பொழுதுபோக்கு

சண்டை காட்சிக்கு மட்டும் 750 வாகனங்கள் – எந்த படத்திற்கு தெரியுமா?

  • November 4, 2023
  • 0 Comments

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை உலக தரத்தில் உருவாக்க பிரசாந்த் நீல் […]

ஆசியா

பாக்கிஸ்தான் விமானப்படை தளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் – மூவர் பலி

  • November 4, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மியான்வலி விமானப்படை தளத்தின் மீது இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் விமானப்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவ.4ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் விமான படைக்குச் சொந்தமான மியான்வலியில் உள்ள விமான பயிற்சி தளம் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழு ஒன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தத்தாக்குதல் […]

மத்திய கிழக்கு

ஈரானில் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து : 32 பேர் உயிரிழப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 32 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. விசாரணையின் முதற்கட்ட கண்டுபிடிப்புகள், காஸ்பியன் கடல் மாகாணமான கிலானில் உள்ள லாங்கருட்டில் அமைந்துள்ள ஓபியம் மறுவாழ்வு வசதியில் உள்ள ஒரு ஹீட்டர் தீக்கு ஆதாரமாக இருந்தது. தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்படாதா நிலையில். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை – திருச்சியில் 3 பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 4, 2023
  • 0 Comments

திருச்சி அருகே இடி விழுந்ததில் செல்போன் வெடித்து காயமடைந்த மூன்று பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – சட்டமன்ற உறுப்பினர் நேரில் நலம் விசாரித்தார் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்துள்ள வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மணிமேகலை (30), முத்துலட்சுமி (40), பெரியம்மாள் (50) ஆகிய 3 பெரும் வயலில் களை பறிக்கும் வேலை […]

இலங்கை

வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மலரவனின் தலைமையில் கடந்த 5 நாட்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1050 பேருக்கு கண்புரை (Cataract Surgery) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி சிகிச்சைக்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களின் கிராமங்களில் இருந்து விசேட பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உடன் இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் […]

மத்திய கிழக்கு

அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் ; 15பேர் பலி,60பேர் படுகாயம்

  • November 4, 2023
  • 0 Comments

இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையின் முன்புறமிருந்த அவசர ஊர்திகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 60 பேர் காயமடைந்துள்ளனர். அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்திகளின் மூலமாக மோசமான நிலையில் உள்ள நோயாளிகள், ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்படவிருந்ததாகக் காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். இவை மருத்துவ அவசர ஊர்திகள் தான்” என்று பேசியுள்ளார் காசாவின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் […]