இலங்கை

யாழில் வீடொன்றில் திருடு போன 135 பவுணுக்கும் அதிகமான தங்கநகைகள்

  • November 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருட்டு போயுள்ளது.அந்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை. இந்நிலையில் தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த […]

இலங்கை

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தால் இலங்கைக்கு வருடாந்தம் 20 பில்லியன் ரூபா இழப்பு

இலங்கைக்கு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் காரணமாக 17 – 20 பில்லியன்.ரூபா வருடாந்த இழப்பு ஏற்படுவதாக Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, காட்டு விலங்குகளினால் ஏற்படும் சேதங்களினால் வருடாந்தம் 31,000 மெற்றிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைகள் இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், வன விலங்குகளால் பயிர் சேதத்தை தடுப்பதற்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் […]

பொழுதுபோக்கு

டைகர் 3 படத்தில் இணைந்த ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் – எகிறும் எதிர்பார்ப்பு

  • November 5, 2023
  • 0 Comments

‘டைகர்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப் இருவரும் இணைந்து ‘டைகர்’ மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர். மனிஷ் சர்மா இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நவம்பர் 12ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் யாஷ் சினிமா யூனிவர்சல் இடம் பெறுவதால் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை தொடர்ந்து தற்போது இதில் […]

இலங்கை

கோப் குழு முன் முன்னிலையாகவுள்ள நிறுவனங்கள்!

  • November 5, 2023
  • 0 Comments

எதிர்வரும் வாரத்தில், பல அரச நிறுவனங்களை பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் முன் அழைக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மறுதினம் (07.11) இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் வரும் புதன் கிழமை இலங்கை தர நிர்ணய நிறுவனம் கோப் குழு முன்னிலையிலும், சப்ரகமுவ பல்கலைக்கழகம் வியாழன் அன்றும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவும் […]

இலங்கை

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கும் சாத்தியம்!

  • November 5, 2023
  • 0 Comments

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை (06.12)  தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், லாஃப்ஸ் நிறுவனமும் விலைத்திருத்தம் குறித்து அறிவித்துள்ளது. மேலும் எரிவாயு மற்றும் சீனியின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பலப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு

விஜய்க்கு முத்தம் கொடுத்தது ஒரு குத்தமாடா? மனம் திறந்தார் மிஸ்கின்

  • November 5, 2023
  • 0 Comments

விஜய் நடித்த யூத் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மிஷ்கின். அதன்பிறகும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு, சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குனர் ஆனார். அதோடு விஜய்யை வைத்து அவர் இதுவரை படம் இயக்கவில்லை. என்றாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தலை வணங்கி விஜய்யின் […]

இலங்கை

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு!

  • November 5, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் […]

மத்திய கிழக்கு

காசாவில் பாலஸ்தீனிய பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை..

  • November 5, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – காஸா இடையே நடந்து வரும் போரின் காரணமாக காஸா நகரில் அனைத்து பொருட்களுக்குமே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிடாய் கண்ட பெண்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் கடுமையாக நடந்துவரும் நிலையில், காஸாவுக்கு உண்வு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் தடைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள், நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் […]

இலங்கை

காசாவில் இருந்து 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!

  • November 5, 2023
  • 0 Comments

காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்களும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05.11) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் தலைரவ் பென்னட் குரே தெரிவித்துள்ளார். ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு வருகை தந்த இலங்கையர்கள் எகிப்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி இலங்கையை வந்தடைந்துள்ளதாக […]

இலங்கை

வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். இளைஞன்…

  • November 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் ( 28) இளைஞன் உயிரிழந்த நிலையில் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.