இலங்கை

இலங்கையில் வீடுகளை இழந்தவர்களுக்கு காணிகள் வழங்கிவைப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

கிரேட்டர் ஹம்பாந்தோட்டை’ அபிவிருத்தித் திட்டத்தினால் 97 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இதன்படி, அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் அமைந்துள்ள 10.11 ஹெக்டேர் அரச காணி, குழுவிற்கு வழங்குவதற்கு மாற்று காணியாக இனங்காணப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டிற்காக 126 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்த 97 குடும்பங்களில் 84 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, சிறிபோபுரவில் அமைந்துள்ள 10.11 ஏக்கர் அரச காணியில் ஒரு […]

இலங்கை

நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு: இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறிய அர்ஜுன

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாட்டை இடைநிறுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் குழு உறுப்பினர் உபாலி தர்மதாச ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளனர். விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட SLC இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை

நாளைய தினம் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ள ஜனாதிபதி ரணில்

  • November 7, 2023
  • 0 Comments

தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும் பட்சத்தில் எதிர்வரும் முதலாவது தேசிய தேர்தலை புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவை நியமித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அத்துடன், தேர்தல் முறை திருத்தம் […]

பொழுதுபோக்கு

கமலின் `தக் லைஃப்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

  • November 7, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே அது இன்னொரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற சிக்கலை சந்தித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகிறார்கள். அதில் நேற்று நடிகர் கமல்ஹாசன் – மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவித்தனர். இதன் அறிமுக […]

இலங்கை

தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் சங்கம் அறிவிப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று (07.11) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

“என்னை போன்ற நடிகைகளுக்கு அது கட்டாயம் தேவை” நம்ம திருச்சி பொண்ணு

  • November 7, 2023
  • 0 Comments

அக்மார்க் திருச்சி பொண்ணு அனுகீர்த்தி வாஸ். ‘மிஸ் இந்தியா’ பட்டத்தின் மூலம் அடையாளம் பெற்று நடிகை ஆனார். நடித்தது இரண்டு படங்கள் தான். தமிழில் ‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் ரவிதேஜா ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘வெற்றி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் குறைவாக நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். தனது கவர்ச்சி படங்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து அவர் […]

இலங்கை

இலங்கை IOC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

பெட்ரோல், டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களைக் கண்டு  மக்கள் ஏமாற வேண்டாம் என பெட்ரோலிய கிடங்கு முனையம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் (எல்ஐஓசி) ஆர்டர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் தொடர்பான சிறப்பு அறிவிப்பை பெற்றோலியக் கிடங்கு முனையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 92 டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகளை எடுத்துச் செல்லும் கப்பல் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுகத்தில்  கரையொதுங்கியதாக […]

இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

  • November 7, 2023
  • 0 Comments

பலத்த மின்னல் தாக்கம்  குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை பெய்யும் எனவும் அவ்வப்போது மின்னல் தாக்கம் ஏற்படக்கூழும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இலங்கை

10 ஆயிரம் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் உடன்படிக்யொன்று எட்டப்பட்டுள்ளது. உடன்படிக்கையின்படி  10,000 இலங்கைப் பண்ணை தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இவ்வாறு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளது. இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 […]

மத்திய கிழக்கு

தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணையக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்! ஹமாஸ் அறிவிப்பு!

  • November 7, 2023
  • 0 Comments

காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 240 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது. இதேவேளை இஸ்ரேலில் பொதுமக்களை தமது அமைப்பினர் கொல்லவில்லை எனவும் தலைவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே காஸா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றுவளைத்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹாகரி செய்தியாளா்களிடம் கூறுகையில், காஸா சிட்டியை அனைத்து திசைகளிலும் இஸ்ரேல் […]