பொழுதுபோக்கு

அடி ஆத்தி.. சமந்தாவா இது.. அவங்களே போட்ட போஸ்ட்ட பாருங்க…

  • November 9, 2023
  • 0 Comments

சர்வதேச இதழான பஜார் ஃபேஷன் இதழின் அட்டை படத்தை அலங்கரிக்க படு போல்டாக நடிகை சமந்தா கொடுத்துள்ள போஸ் இணையத்தை ஒட்டுமொத்தமாக சூடாக்கி உள்ளது. நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் இந்தியளவில் 3 கோடி ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். அந்த ரசிகர்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இருந்து ஏதாவது சொல்ல விரும்புறீங்களா என பஜார் இந்தியா ஃபேஷன் இதழின் பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்வியை பதிவிட்டு, அதற்கான பதிலும் செம சூப்பராக கொடுத்துள்ளார் சமந்தா. புஷ்பா படத்தில் ஓ […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது

வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இசை வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக்கொண்டிருந்தபோது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அநாமதேய தகவலாளரின் தகவலின் பேரில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று வெலிமடை நீதவான் முன்னிலையில் […]

உலகம்

அமெரிக்க – சீனா பொருளாதாரத்தை துண்டிக்கப்போவதாக விவேக் ராமசாமி சபதம்!

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி, நாட்டின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க-சீனா பொருளாதாரத்தை துண்டிக்கப் போவதாக சபதம் செய்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் போட்டியாளர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிக்கி ஹேலி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், முன்னாள் நியூ ஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி மற்றும் தென் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட் ஆகியோர் முன்னிலையில் கருத்து வெளியிட்ட விவேக் ராமசாமி, வலுவான […]

இலங்கை

ICC இலங்கை அணிக்கு தடைவிதித்தால் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் – காஞ்சன!

  • November 9, 2023
  • 0 Comments

கிரிக்கட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பொறுப்பு அணி தெரிவு அல்லது நிர்வாகத் தெரிவு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தின் பிரேரணைகளின் ஊடாக ஐ.சி.சி இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் அதற்கு 225 பேரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலகம்

அமெரிக்காவில் பலியான இந்திய இளைஞர்! பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி!

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயது இந்திய மாணவர் வருண் ராஜ் புச்சா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் படித்து வந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் வருண் படித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதியன்று பொது உடற்பயிற்சி கூடத்தில்  ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவரால் கத்தியால் தலையில் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தற்போது […]

வட அமெரிக்கா

545 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம்…இன்பர்மேட்டிகா நிறுவனத்தின் செயலால் அதிர்ச்சி!

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் நல்ல லாபத்துடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களின் 10 சதவீதம் பேரை திடீரென வேலையை விட்டு அனுப்பி உள்ளதால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானது முதல் இது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் என்ற குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வு அதை உண்மையாக்கி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரெட்வுட் சிட்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் […]

இலங்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

  • November 9, 2023
  • 0 Comments

எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் கருதுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு குறித்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நேற்று (08) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை […]

பொழுதுபோக்கு

நடிகையுடன் போட்டோ எடுக்கும் போது ஜிப் போட மறந்துடீங்களா கமல் சார்…

  • November 9, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசன் பேன்ட்டில் உள்ள ஜிப்பை போடாமல், போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு… நீங்கள் பெண் பாதுகாப்பு பற்றி பேசுறீங்களா? என பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒரு சரியான நீதிமானாக இருக்காமல், நீதி தவறி தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும்… ஒரு தரப்பு குற்றச்சாட்டுகளை கேட்ட அவர், குற்றம் சுமாற்றப்பட்டவரின் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவில்லை என பல பிக்பாஸ் […]

ஐரோப்பா

மாற்று பாலினத்தவர்களுக்கும் கத்தோலிக்க ஞானஸ்நானம்: வாடிகனின் எடுத்துள்ள முக்கிய முடிவு

  • November 9, 2023
  • 0 Comments

கத்தோலிக்க ஞானஸ்நானத்தை மாற்று பாலினத்தவர்களும் பெறலாம் என வாடிகன் அறிவித்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜோசப் நெக்ரி என்பவர் மாற்று மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருச்சபையில் ஞானஸ்நானம் வழங்குதல் குறித்து கத்தோலிய கிறிஸ்துவர்களின் தலைமை இடமான வாடிகனுக்கு கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகளை உள்ளடக்கிய தொகுப்பை அனுப்பியுள்ளார். இதற்கு போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் வாடிகனின் நம்பிக்கைக்கான கோட்பாட்டுத் துறை 3 பக்க கடிதத்தை பாதிரியார் ஜோசப் நெக்ரிக்கு அனுப்பி வைத்துள்ளது.அதில், மாற்று பாலினத்தவர் மற்றும் […]

இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்காலத் தடை!

  • November 9, 2023
  • 0 Comments

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.