அறிந்திருக்க வேண்டியவை

உலக மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்

  • November 11, 2023
  • 0 Comments

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் இந்த விடயத்தை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26ஆம் திகதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியைக் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவம்பா் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு […]

ஆசியா

ஜப்பானில் எரிமலை வெடிப்பால் உருவான புதிய தீவு – வெளிவந்த பல முக்கிய தகவல்கள்

  • November 11, 2023
  • 0 Comments

தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமாவுக்கு 1 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது. பெயரிடப்படாத எரிமலை மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்கத் தொடங்கியது. வெடிப்பு நிகழ்ந்த 10 நாள்களுக்குள் எரிமலை சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேகரமாகி அதன் முனை கடலுக்கு மேலாக உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. நவம்பர் தொடக்கத்தில் உருவான இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் உயரத்தோடும் எழுந்துள்ளது. […]

இலங்கை

ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக கொலை? வெளிவந்த தகவல்

  • November 11, 2023
  • 0 Comments

கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அல்லது அவரை சொத்தை பெறுவதற்காக அவருக்கு நெருக்கமான ஒருவரை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த விடயம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை தொடர்பான புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியாவில் அவருக்குச் […]

ஆசியா

தென்கொரியாவை அச்சுறுத்தும் மூட்டைப்பூச்சி – 30-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

  • November 11, 2023
  • 0 Comments

தென்கொரிய தலைநகர் சியோலில், மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்து பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூட்டை பூச்சி மருந்து தெளித்துவருகின்றனர். கல்லூரி விடுதிகள், மசாஜ் ஸ்பாக்கள் போன்ற இடங்களில் மூட்டைப்பூச்சி பெருக்கம் அதிகரித்தது. அது சார்ந்த தொற்றுகளால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அடுத்த 4 வாரங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மூட்டைப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

Deepfake செய்யப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்க இலகு வழிமுறைகள்!

  • November 11, 2023
  • 0 Comments

Deepfake என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் முகத்தை பிரபலமானவர்களின் முகம் போல மாற்றி அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் நடிகைகளாகவே உள்ளனர். சமீபத்தில் கூட ராஷ்மிகா மந்தனாவின் Deepfake செய்யப்பட்ட காணொளி இணையத்தில் வைரல் ஆனது. Deepfake தொழில்நுட்பம் என்பது ஆடியோ வீடியோ புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை போலியாக உருவாக்குவதைக் குறிக்கும் சொல்லாகும். இந்தத் தொழில்நுட்பத்தில் வழக்கமான போலி உருவாக்கும் முறைகளுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு […]

ஐரோப்பா

பிரான்ஸில் விமான நிலையத்தில் சிக்கிய நபர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

  • November 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பயணி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. 60 வயதுடைய ஒருவர் பெரு நாட்டில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையத்தினை வந்தடைந்தார். அவர் 21 கிலோ எடையுடைய கொக்கைன் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற நிலையில், சுங்கவரித்துறையினரால் கைது செய்யபப்ட்டார். Lima (Peru) நகரில் இருந்து வருகை தந்த குறித்த நபர், இங்கிருந்து Barcelona (Spain) நகருக்குச் செல்லும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • November 11, 2023
  • 0 Comments

ஜெர்மனிக்கு குடியேறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம், வெளிநாட்டு திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது. நாடு எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறையை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஜெர்மன் அரசாங்கம் திறமையான குடியேற்றச் சட்டத்தை சீர்திருத்த முடிவு செய்தது. இது பல்வேறு கட்டங்களில் நடைமுறைக்கு வரும், சில மாற்றங்கள் இந்த மாதம் மற்றும் சில மாற்றங்கள் 2024 இல் நடைமுறைக்கு வருகின்றன. […]

ஆசியா

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்

  • November 11, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகத் தொழில்துறைக்கான புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்கத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. Enterprise Singapore அமைப்பும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர் அனுபவம், செயல்பாட்டுத் திறன், வர்த்தக வளர்ச்சி ஆகிய 3 முக்கிய அம்சங்களில் மின்னிலக்கத் தீர்வுகளைக் கொண்டுவருவதில் திட்டம் கவனம் செலுத்தும். வர்த்தகர்கள் புதிய சவால்களைச் சமாளிக்கவும் வாய்ப்புகளைப் பெறவும் மின்னிலக்கத் தீர்வுகள் கைகொடுக்கும். அவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும்போது மேலும் சிறந்த அனுபவத்தைப் பெறுவர். வர்த்தக, […]

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

  • November 11, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்றைய முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம் இவ்வாறு விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உள்நாட்டு வர்த்தகர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கமைய, நேற்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக காணப்பட்டது. அத்துடன், நேற்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் 22 கரட் தங்கத்தின் […]

உலகம் செய்தி

காலநிலை குறித்து ஒப்பந்தங்களை எட்டியுள்ள அமெரிக்கா மற்றும் சீனா

  • November 10, 2023
  • 0 Comments

இம்மாத இறுதியில் துபாயில் நடைபெறும் COP28 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக சீனாவுடன் அமெரிக்கா சில ஒப்பந்தங்களை எட்டியுள்ளது என்று வாஷிங்டனின் காலநிலை தூதர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக உச்சி மாநாட்டில் ஜான் கெர்ரி கூறுகையில், “எங்கள் நாள் பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். சில உடன்படிக்கைகளை நாங்கள் கொண்டு வந்தோம்.விவரங்கள் “சரியான தருணத்தில் விரைவில்” பகிரப்படும், என்றார். COP28 இல் உள்ள எந்தவொரு ஒருமித்த கருத்துக்கும் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் உலகின் […]