இலங்கை

மண்சரிவில் புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் சடலமாக மீட்பு

பலாங்கொடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவில் வீடொன்று புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் வீடொன்று மண்சரிவில் புதையுண்டதில் திருமணமான தம்பதியரும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் நான்கு பேரின் சடலங்களும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் […]

பொழுதுபோக்கு

‘KH 235’: கமல்ஹாசனும் இணையும் அட்லி

இயக்குனர் அட்லீ, ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர். அவரது பாலிவுட்டில் அறிமுகமான ‘ஜவான்’ திரைப்படம் இந்த மைல்கல்லை எட்டியது. அனிருத் இசையமைக்க, ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த உலகளாவிய வெற்றிப் படமானது. அட்லீ ஒரு சமீபத்திய பேட்டியில் அவர் ஒரே நேரத்தில் இரண்டு மெகா திட்டங்களில் பணிபுரிவதை உறுதிப்படுத்தினார். அதில் ஒன்று தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் […]

தமிழ்நாடு

பிரபல நிறுவன சேமியா பாக்கெட்டில் இருந்த பொருள்… சமைக்க முயன்றபோது காத்திருந்த அதிர்ச்சி!

  • November 14, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மளிகைக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தேவகோட்டையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் தீபாவளி பண்டிகைக்கு சமைப்பதற்காக மளிகைப் பொருட்களை அங்கிருந்த ஒரு கடையில் வாங்கியுள்ளார். அதில் அணில் சேமியாவை அவர் சமைப்பதற்காக நேற்று திறந்து பார்த்தபோது இறந்து காய்ந்துபோன தவளை இருந்தது. உடனே மளிகைக்கடையில் போய் புகார் கூறினார் . அதற்கு அந்த கடைக்காரரோ நான் […]

உலகம்

டெக்சாஸில் கார் மீது மோதி சிறிய ரக விமானம் விபத்து!

  • November 14, 2023
  • 0 Comments

டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டெக்சாஸில் உள்ள ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு ; தாய் உட்பட மூவர் கைது

  • November 14, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (13) முல்லைத்தீவு பொலிஸில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந் நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு […]

மத்திய கிழக்கு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 102 ஐ.நா பணியாளர்கள் மரணம் !

  • November 14, 2023
  • 0 Comments

ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 102 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டாங்கிகளுடன் தங்களது வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்கு தங்களது தளவாடங்களை அமைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. ஐ.நா. நடத்தும் மருத்துவமனையில் நடத்தபட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. பொதுமக்கள் மீது […]

உலகம்

பின்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

பின்லாந்து ரஷ்யாவில் இருந்து தனது எல்லைக் கடவுகளுக்கு வரும் மூன்றாம் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்கிறது. மற்றும் நிலைமையைக் கையாள “நடவடிக்கை எடுக்க” தயாராகி வருகிறது என்று ஃபின்லாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “குறுகிய காலத்தில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆவணங்கள் இல்லாத போதிலும் பின்லாந்துக்கு பயணத்தை அனுமதிக்க ரஷ்ய அதிகாரிகள் தங்கள் பணியை மாற்றியுள்ளனர், இது சட்டவிரோத நுழைவு” என்று உள்துறை அமைச்சர் மாரி ரண்டானென் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த, ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின், […]

பொழுதுபோக்கு

லியோவுக்குப்பின் பல கோடிகளை கடந்தது த்ரிஷாவின் சம்பளம்… சுடச்சுட வந்த செய்தி

  • November 14, 2023
  • 0 Comments

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 & 2 படங்களுக்குப் பிறகு, எவர்கிரீன் நடிகை த்ரிஷா மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். கடல் போன்ற ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் த்ரிஷாவின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. 40 வயதானாலும் த்ரிஷா மீண்டும் கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியுள்ளார். தளபதி விஜய்-லோகேஷ் கனகராஜின் LEO படத்தின் வெற்றிக்குப் பிறகு, த்ரிஷா, அஜீத் குமாரின் விடா முயற்சி தவிர, உலகநாயகன் கமல்ஹாசனின் Thug Life உட்பட பல திரைப்படங்களில் கையெழுத்திட்டார். […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலைகள் வெடிப்பு :வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல அனுமதி

நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்திய நகரத்தில் வசிப்பவர்கள், உடமைகளைச் சேகரிக்க தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன் மற்றும் வியாழன் என இரு தினங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் 1400 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய நாட்களிலும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது […]