பொழுதுபோக்கு

கைகோர்க்கும் ராணா – துல்கர் சல்மான்… மகிழ்ச்சிக்கடலில் ரசிகர்கள்

  • July 30, 2023
  • 0 Comments

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் […]

பொழுதுபோக்கு

ஆண்டனி தாஸாக மிரட்டும் சஞ்சய் தத்… மாஸ் என்ட்ரி – வீடியோ

  • July 30, 2023
  • 0 Comments

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நேற்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவருக்கு, பலர் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் நிலையில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் லியோ பட குழு அவரின் கிலிம்ஸி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பா

கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பில் உக்ரைன் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • July 30, 2023
  • 0 Comments

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றுவதற்கு உக்ரைன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கான சட்டமூலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். உக்ரைனும் ரஷ்யாவும் பாரம்பரியமாக ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடின. ரஷ்யாவின் பாரம்பரியத்தைக் கைவிடவும் உக்ரைனுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்டது. குறைந்தது 17ஆம் நூற்றாண்டிலிருந்து உக்ரேன் மொஸ்கோ தேவாலயத்தின் தலைமைத்துவத்தைப் பின்பற்றியது. ஆனால் 2019ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த […]

இலங்கை

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க களமிறங்கும் பிரபலங்கள்

  • July 30, 2023
  • 0 Comments

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024 ஜனவரியில் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. இது விடயம் சம்பந்தமாக கொழும்பில் கடந்தவாரம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவண்ண, நளின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரியங்கர ஜயரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி

  • July 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமூக உதவி பணம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சமூக உதவி பணமானது குறைந்த அளவில் கிடைக்க வேண்டும் என்று பயண் மாநிலத்தினுடைய ஆளும் கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கட்சியுடைய தலைவர் மார்கோ சுவிட் பத்திரிகையாளர் முன் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு பின்னர் அவர்களின் அகதி விண்ணப்பம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறையும் நெருக்கடி

  • July 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த வருடத்தில் இருந்து பாரிய பணவீக்கத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரெஞ்சுப் பொருளாதாரம் இவ்வருட ஆரம்பம் முதல் ஓரளவு சீரடைவைச் சந்தித்துள்ளது. ஏற்றுமதிக்கான வருவாய் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் ஜூன் மாதம் வரை 0.1 சதவீதத்தால் அதிகரித்த பொருளாதாரம் ஏழாம் மாதத்தில் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்த அளவை விட அதிகமாகும். பிரான்சில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், வருவாய் அதிகளவு ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வீட்டு பாவனைப் […]

உலகம்

டுவிட்டர் கட்டடத்தின் மேல் ‘X’ – பாரிய சர்ச்சையில் சிக்கிய மஸ்க் – விசாரணைகள் ஆரம்பம்

  • July 30, 2023
  • 0 Comments

டுவிட்டர் என இதுவரை அழைக்கப்பட்ட நிறுவனத்தின் கட்டடத்தின்மேல் தற்போது X என்ற சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள பெரிய ‘X’ சின்னம் தொடர்பில் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின்மேல் எழுத்துக்களோ சின்னங்களோ பொருத்த உரிமம் பெற வேண்டும் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கட்டடத்தின் ஒரு பக்கம் இருந்த டுவிட்டரின் குருவி சின்னத்தை ஊழியர்கள் அகற்றிக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர். நடைபாதையில் செல்லும் […]

இலங்கை

கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து விபத்து – பலர் படுகாயம்

  • July 30, 2023
  • 0 Comments

கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்தின் ஓட்டுநர் தூக்கத்தில் வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

சுயிங்கம் மெல்பவரா நீங்கள்? உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 30, 2023
  • 0 Comments

வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதற்காக சுயிங்கம் மெல்லும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். சிலர் சுயிங்கம் சுவைப்பது பசியை கட்டுப்படுத்தும் என்று கருதுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என்பது சிலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் உடல் எடை இழப்புக்கு சுயிங்கம் உதவாது. அதே வேளையில் உட்கொள்ளும் கலோரி அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்யும். சுயிங்கம் மெல்லுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம்! கலோரிகள் எரிக்கப்படும்: சுயிங்கம் மெல்லும் போது வாய் அடிக்கடி நகரும். அப்படி வாய் அசைபோடும்போது […]

இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்ற நிலை!

  • July 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் சுயவிபரங்களை சேகரிக்கும் பணிகளை அந்த மாநில விரைவுப்படுத்தியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இதுவரையில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மணிப்பூரில் […]

You cannot copy content of this page

Skip to content