களனிமுல்லையில் உள்ள சட்டவிரோத குப்பை மேட்டில் தீடீர் தீ பரவல்!
களனிமுல்லை பகுதியில் உள்ள சட்டவிரோத குப்பை மேட்டில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டே மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேக்ஹோ இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த காணி சில காலமாக சட்டவிரோதமான முறையில் மீட்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர். முல்லேரியாவ பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.