புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.விஜயகுமாருக்கு அஞ்சலி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் நேற்று (14) சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக நேற்று (14) யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருடைய உடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் […]