குரான் எரிப்பு சம்பவம்!! OIC எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
குரான் எரிப்பு சம்பவம் தொடர்பாக டென்மார்க் மற்றும் ஸ்வீடனுடனான உறவில் இஸ்லாமிய நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு OIC அழைப்பு விடுத்துள்ளது. இச்சம்பவத்தில் இரு நாடுகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள OIC தலைமையகத்தில் கூடிய அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. […]