பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – திருமாவளவன்!
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மற்ற எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் […]