வட அமெரிக்கா

பொதுமக்கள் குற்றச்சாட்டு ; ட்விட்டர் தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்ட ‘X’லோகோ

  • August 1, 2023
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட எக்ஸ் லோகோ பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அகற்றப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ- வை அண்மையில் X-என எலான் மஸ்க் மாற்றினார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மேற்கூறையில் பிரமாண்டமான X லோகோ நிறுவப்பட்டது. அதிலிருந்து வெளிப்பட்ட அதிகப்படியான வெளிச்சம் எரிச்சலூட்டுவதாக அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். அதை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கூரை மீதிருந்து லோகோ-வை […]

உலகம்

ஆங் சான் சூகி ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும். கடந்த வாரம், ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைநகர் நேபி தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற 78 வயதான ஆங் சான் சூகி, ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், பெப்ரவரி 2021 […]

ஆஸ்திரேலியா

இணையத்தில் வெளியான புகைப்படம்… வெளிச்சத்துக்கு வந்த நாட்டின் மிக கொடூரமான சம்பவம் !

  • August 1, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் முன்னாள் சிறார் காப்பக ஊழியர் ஒருவர் மீது 91 குழந்தைகளை சீரழித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்புடைய சம்பவம் பற்றி, பொலிஸார் தெரிவிக்கையில், நாட்டின் மிகவும் கொடூரமான சிறார் துஸ்பிரயோக வழக்கு என குறிப்பிட்டுள்ளனர். 45 வயதான அந்த நபர் மீது 1,623 தனி வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 136 பலாத்கார வழக்குகள் மற்றும் 110 வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டார்க் வெப் இணையத்தில் சிறார் துஸ்பிரயோக புகைப்படம் ஒன்று வெளியாக, அதிகாரிகள் தரப்பு சந்தேகத்தின் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு!

  • August 1, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் மேலும் 7,000 இலங்கையர்களுக்கு கொரியாவில் பணிபுரிய விசா வழங்கப்படும் என கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீ தெரிவித்தார். கொரியாவில் 25,000 இலங்கை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது 32,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த புதிய கொரியத் தூதுவர், இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களை விரைவாக முடிப்பதுடன், இலங்கையில் சில புதிய அபிவிருத்தித் திட்டங்களிலும் […]

இலங்கை

பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் மாணவர்கள்! திருகோணமலையில் நடந்த நீச்சல் போட்டி

திருகோணமலையில் இன்று ( 01) நீச்சல் போட்டியொன்று நடாத்தப்பட்டது. TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி பெறும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் பாக்கு நீரினை கடப்பதற்காக தயாராகும் நிலையில் இப்போட்டி நடாத்தப்பட்டது. திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற் பகுதியிலிருந்து கோனேஸ்வரர் ஆலயம் அருகாமையின் ஊடாக சல்லி முத்துமாரியம்மன் கோயில் கடற்கரைக்கு மாணவர்கள் நீந்திச் சென்றுள்ளனர். பதினாறு வயதுக்கு கீழ் பட்ட 13 சிறார்கள் இந்த நீச்சல் போட்டியில் பங்கு பற்றினர். […]

இலங்கை

நாட்டை வீழ்த்துவதுதான் அவர்களின் ஒரே இலக்கு – நாமல்!

  • August 1, 2023
  • 0 Comments

நாட்டை வீழ்த்துவதுதான் போராட்ட காரர்களின் ஒரே இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று உண்மையாக போராட்டம் நடத்திய தரப்பினரைக்கூட சில அரசியல் கட்சிகள் திசை திருப்பின எனவும்,  அன்று எமது வீடுகளை எரித்தார்கள். வீடுகளை எரித்தவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்யக்கூட முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்தார். ஏனெனில் அவர்கள் மீது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திட்டமிட்ட தரப்பினர் இன்னமும் […]

இந்தியா

‘மணிப்பூர் விவகாரம் பற்றி பேச பிரதமர் மோடி விரும்பவில்லை’ – மல்லிகார்ஜுன் கார்கே

” பிரதமர் மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறார், ஆனால் அவர் எங்களுக்கு பதிலளிக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடி விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை என்பது போல குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் நாங்கள் கடந்த 11 நாட்களாக இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காத்திருக்கிறோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே […]

ஐரோப்பா

5 ஆண்டுகளாக பச்சை காய்கனிகளை மட்டுமே சாப்பிட்டு வந்த பெண் உயிரிழப்பு!

  • August 1, 2023
  • 0 Comments

ர்யாவை சேர்ந்த பெண் ஹனா சம்சனோவா (39). இவர் பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். ‘வீஹன்’ (பச்சை காய்கனிகளை சாப்பிடும் நபர்) பிரபலமான இவர் கடந்த 5 ஆண்டுகளாக பழங்கள், காய்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். பழங்கள், காய்களை ஜூசாகவும் குடித்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் ஹனா சம்சனோவா அங்கு கிடைக்கும் காய்கனிகளை உண்பது மற்றும் அதன் பலன்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.இதனிடையே ஹனா சம்சனோவா கடந்த சில […]

இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை!

  • August 1, 2023
  • 0 Comments

      ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை (02.08) நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு மற்றும் கட்சி மாநாட்டை எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு எடுத்த தீர்மானம் நாளை  நடைபெறவுள்ள செயற்குழுக் […]

இலங்கை

சினோபெக் எரிபொருள் தொடர்பில் வெளியான் முக்கிய அறிவிப்பு!

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் சினோபெக் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் சில்லறை பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

You cannot copy content of this page

Skip to content