போக்குவரத்து பொலிஸாரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநர்! வெளியான காணொளி
போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வீடியோ வைரலானதை அடுத்து, வெலிக்கடை பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர். காட்சிகளில், தில்ஷான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேக நபர், ”அபராதத்தை வழங்கிய பின்னர் சாலையில் இருக்க வேண்டாம்” என்று அதிகாரியை எச்சரித்தார். இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவலான கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட்டுள்ளார்.