இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் ; டிரம்ப்
சீனாவுடன் தமது நாடு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியாவுடனும் மிகக் பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் எனக் கோடிகாட்டியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “நாம் இப்போதுதான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்போவதில்லை. அதேவேளை, சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரியவரும்; அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக, மிகப் பெரிய ஒப்பந்தமாக இருக்கலாம்,” என்று டிரம்ப் கூறினார். “எல்லோருடனும் […]