இலங்கை

மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

  • August 4, 2023
  • 0 Comments

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முன்னாள் பிரதமருக்கு சவால் விடுத்த தெற்காசிய நாட்டவர் நாடு கடத்தல்

  • August 4, 2023
  • 0 Comments

முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மேற்கொண்ட இரகசிய அமைச்சரவை நியமனங்களை சவால் செய்த ஆப்கானிஸ்தான் நபர் ஒருவரை ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெடரல் நீதிமன்றத்தில் இந்த நபர் தாக்கல் செய்த மனுவில், அப்போதைய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் தனது விசாவை 2021 இல் ரத்து செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அப்போதைய பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஏற்கனவே உள்துறை அமைச்சராக இரகசியமாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதால், அவரது விசா தொடர்பாக முடிவெடுக்க கரேன் ஆண்ட்ரூஸுக்கு அதிகாரம் […]

அறிந்திருக்க வேண்டியவை

கூகுள் குரோம் தேடுதளத்தில் புதிய வசதிகள் அறிமுகம்!

  • August 4, 2023
  • 0 Comments

பயனாளர்களின் வசதிக்கேற்ப கூகுள் குரோம் தேடுதளத்தின் புதிய வசதிகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு மாற்றங்களோடு புதிய அப்டேட்டை வெளியிடுகிறது. உலகின் முன்னணி இணைய தேடுதளமான கூகுள் குரோம் விளங்குகிறது. மேலும் தகவல் என்ற உடன் அனைவரின் எண்ணத்திற்கு வருவது கூகுள் குரோம். கூகுள் குரோமில் இல்லாத தகவல்களே இல்லை என்ற அளவில் எண்ணிலடங்கா தகவல்களை தனக்குள் சேகரித்து வைத்துள்ளது கூகுள் குரோம். இதனால் கூகுள் குரோமில் மணிக்கு பல கோடிக்கணக்கான தகவல்கள் […]

ஆசியா

இனி 2 மணி நேரம் மட்டுமே – சீனாவில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு

  • August 4, 2023
  • 0 Comments

சீனாவின் இணைய கண்காணிப்பு அமைப்பு, சிறுவர்கள் கைடக்க தொலைபேசிக்கு செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த விதிமுறைகளை வகுத்துள்ளது. அத்தோடு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கையடக்க தொலைபேசி சாதனங்களில் பெரும்பாலான இணைய சேவைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும், 8 […]

இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

  • August 4, 2023
  • 0 Comments

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) திருத்தியமைக்கப்படவுள்ளது. மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் இவ்வருட எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். எனினும் தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதோடு ஒரு மெட்ரிக் தொன் 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் இடம்பெற்ற விலைத் திருத்தத்தின் பிரகாரம், […]

இலங்கை

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வித்துள்ள அறிவிப்பு!

  • August 4, 2023
  • 0 Comments

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சியின்றி அல்லது முன்பள்ளி டிப்ளோமா இல்லாமல் முன்பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடுவெல, பொமிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மூன்று மற்றும் நான்கு வயதுடைய பிள்ளைகளின் மனங்கள் சரியான முறைமையின்றி குழப்பமடைந்தால், பாடசாலைக் கல்வியினால் அவர்களை மீளக் கட்டியெழுப்ப முடியாது. எனவே, பாலர் பாடசாலைகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கான […]

ஐரோப்பா

பிரான்ஸில் 80 பேரின் உயிரை பறித்த வெப்பம்

  • August 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஜூலை மாதத்தில் 80 பேர் மரணித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது. பிரான்ஸின் தெற்கு பிராந்தியங்கள் முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் கடுமையான வெப்பம் நிலவியிருந்தது. இந்த வெப்பம் காரணமாக 80 வரையான மரணங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மரணம் ஜூலை 7 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையான ஒரு வாரகாலத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளை, கடும் […]

இலங்கை

தம்புத்தேகம பகுதியில் விபத்து – நால்வர் பலி!

  • August 4, 2023
  • 0 Comments

தம்புத்தேகம அரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04.08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 08 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ஜெர்மனியில் கொரோனா மோசடிகள் – 26 ஆயிரம் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள்

  • August 4, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கொரோனா மோசடிகள் குறித்து 26 ஆயிரம் விசாரணைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஜெர்மனியில் கொரோனா காலங்களில் மோசடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியமைக்கான அத்தாட்சி பத்திரங்கள் தொடர்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட 26 ஆயிரம் வழக்கு விசாரணைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ஜெர்மனியில் குற்ற தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2021 ஏப்பிரல் மாதத்துக்கும் 2022 நவம்பர் மாதத்துக்கும் இடையில் இவ்வாறான குற்றவியல் சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் மொத்தமாக 6425 இவ்வகையான […]

இலங்கை

இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • August 4, 2023
  • 0 Comments

வெளிநாட்டு உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்  சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ‘கட்டுமானத் தொழில் புத்துயிர் தொடர்பான செயற்குழு’ நேற்று (03.08) கூடிய நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட டஅவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் வெற்றியினால் அந்த செயற்பாடுகளை மும்முரமாக […]

You cannot copy content of this page

Skip to content