இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வை அறிவித்தார்
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 34 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்துக்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 156 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு கிடைத்த வெற்றியுடன் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். லீக் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 70 T20 போட்டிகளில் விளையாடியுள்ள […]