பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து : 15 பேர் பலி!
பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே குறித்த விபத்து இன்று (6.08) இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் ராவல்பிண்டி நோக்கிச் சென்றதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.