தெற்கு உக்ரைனில் ஷெல் தாக்குதல் : மூவர் பலி!
தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சன் மீது ரஷ்யப் படைகள் இன்று (07.08) அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் இருவர் வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெர்சன் நகரம் மற்றும் கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நள்ளிரவில் ஆரம்பித்து பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.