இலங்கை

ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

  • August 7, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 05 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 57 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் இறுதியாக வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபா 55 சதமாகவும், விற்பனை பெறுமதி 326 ரூபா 65 […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் புகைப்படங்கள்….

  • August 7, 2023
  • 0 Comments

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் விசேட அழைப்பின் பேரில், உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறார்களை சந்திக்கும் கண்காணிப்பு பயணத்தில் இணைந்தார். யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கரின் மேற்பார்வையின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான யுனிசெப்பின் குழந்தை ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதன்படி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் […]

இலங்கை

புதையல் தோண்டப்படலாம் : ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

  • August 7, 2023
  • 0 Comments

நீர் வற்றியுள்ள உடவலவ நீர்த்தேக்கத்தில் புதையல் அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அச்சம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உடவலவ நீர்த்தேக்கத்தை அவதானிப்பதற்காக அங்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். உடவலவ வறண்டு கிடக்கும் பின்னணியில் சமனல குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்படாமை சந்தேகத்தை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி!

ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் திகதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து […]

வட அமெரிக்கா

வித்தியாசமான சுவையில் காபி: சந்தேகத்தில் CCTV பொருத்திய கணவருக்கு தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

  • August 7, 2023
  • 0 Comments

அமெரிக்கர் ஒருவர், தனது காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால் சந்தேகம் ஏற்படவே, வீட்டில் ரகசிய கமெராக்களை பொருத்தி வைத்துள்ளார். அமெரிக்க விமானப்படை வீரரான ராபி ஜான்சனுக்கு , தன் குடிக்கும் காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால், தன் மனைவி மெலடி தன் காபியில் எதையோ கலப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காபியை சோதிக்கும்போது, அதில் அதிக அளவில் குளோரின் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் ராபி. தன் காபியில் பிளீச் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவே, சமையலறை, துணி துவைக்கும் இயந்திரம் […]

ஆசியா

வங்காளதேசத்தில் டெங்கு பாதிப்பு – 303 பேர் பலி…!

  • August 7, 2023
  • 0 Comments

ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாகவும் வங்காளதேசம் விளங்குகிறது. கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 303 பேர் தீவிர காய்ச்சல் […]

இலங்கை

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதினின் மரணம் குறித்து மைத்திரி கருத்து!

  • August 7, 2023
  • 0 Comments

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். வசீம் தாஜுதீன் காரில் வைத்து எரித்து கொல்லப்பட்டதாகவும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக இருந்த அவரது எலும்புகளும் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்து இளவரசர் ஒருவரின் காதலியை தாஜுதீன் காதலிக்க முயற்சித்ததே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது தொடர்பான வழக்குக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் […]

செய்தி

இலங்கையில் ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

  • August 7, 2023
  • 0 Comments

குடிநீர் கட்டண உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில் நடத்துவதற்காக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுடைய ஹோட்டல்களில் நீர் நுகர்வு அதிகரிப்பால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக நிறைய பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த நிலைமைகளால் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும், இல்லையெனில் அவர்களின் வணிகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஹோட்டல் […]

இலங்கை

மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சாரத்தின் மீதான விலை திருத்தம் இருக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை ஆண்டுக்கு இருமுறை திருத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இன்றி, ஆண்டு முழுவதும் நாடளாவிய ரீதியில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உலகம்

சந்திரயான் -03 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியீடு!

  • August 7, 2023
  • 0 Comments

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. படங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை தெளிவாகக் காட்டுகின்றன. ஆகஸ்ட் 23ஆம் திகதி இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இந்த திட்டம்  வெற்றி பெற்றால், நிலவின் தெற்குப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைத் தொடர்ந்து சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடாக இந்தியா காணப்படும்.

You cannot copy content of this page

Skip to content