இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு […]

தமிழ்நாடு

அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவின் பேச்சால் பாஜகா- வில் வெடித்த குழப்பம்

  • August 7, 2023
  • 0 Comments

பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ,மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. […]

இலங்கை

குடும்ப பெண்ணுக்கு தன் பிறப்புறுப்பை காட்டிய அதிகாரி சிக்கினார்

  • August 7, 2023
  • 0 Comments

குடும்ப பெண் ஒருவருக்கு ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக காட்டி தையல் இயந்திரம் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். தனது ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து குடும்ப பெண்ணின் வட்அப்ஸ் செயலியின் ஊடாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் இடம்பெற்ற விமான விபத்து; காணொளி வெளியானது

  • August 7, 2023
  • 0 Comments

திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற பயிற்சி விமான விபத்து குறித்த காணொளி வெளியாகி உள்ளது. இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை […]

இலங்கை

மத்திய வங்கியின் கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

  • August 7, 2023
  • 0 Comments

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3,724 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருந்த நிலையில்,  2023 ஜூலையில் 3,762 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி  தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியிலிருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இடமாற்று வசதி உள்ளது. இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று இலங்கை […]

இந்தியா

மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லையென பொலிஸாரிடம் புலம்பிய திருடன்!

கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரே கோயிலில் 3-வது முறையாக திருடி பொலிஸாரிடம் சிக்கிய நபர், இப்போதெல்லாம் மக்கள் யாரும் உண்டியலில் காசு போடுவதில்லை என புலம்பியுள்ளார். கோழிக்கோடு பகவதியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருடியது தொடர்பாக சஜீவன் என்ற இளைஞரை கைது செய்த பொலிஸார் விசாரணைக்காக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, இப்பகுதி மக்கள் எவரும் சரியில்லை, உண்டியலில் யாரும் காசு போடவில்லை என சஜீவன் புலம்பியதைக் கேட்டு சுற்றி நின்றிருந்த மக்கள் சிரித்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 2 […]

ஆசியா

10 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் படிக்க கூடாது – தலிபான் அரசின் புதிய அடக்குமுறை

  • August 7, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை ஏற்கனவே அந்நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாடசாலைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டாம் என தலிபான் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதேசமயம் பெண்கள் […]

இலங்கை

பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு!

  • August 7, 2023
  • 0 Comments

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

சச்சின் நடிப்பில் உருவாகியுள்ள திகில் கலந்த உண்மைச் சம்பவம் செப்டம்பர் 1 வெளியாகிறது

  • August 7, 2023
  • 0 Comments

‘பிகினிங்’ படத்தில் நடித்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சச்சினும், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ‘ஜெயில்’ படத்தின் மூலம் பிரபலமான அபர்னதியும் ‘Demon’ (பேய்) படத்தில் இணைந்து நடிக்கின்றனர். பிரபல இயக்குனர் வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிமுக இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கிய இப்படம் செப்டம்பர் 1, 2023 அன்று திரைக்கு வர உள்ளது. விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் ஆர் சோமசுந்தரம் தயாரித்துள்ள இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர், திகில் கலந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் […]

உலகம்

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத் தீ பரவல்! 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மத்திய தரைக்கடல் தீவான சர்டினியாவில் 50க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவி வருகின்றன, பலத்த காற்று காரணமாக தீயை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளை சிக்கலாக்குகிறது 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 14 நீர் சுமந்து செல்லும் விமானங்கள் மத்திய போர்ச்சுகலில் உள்ள காஸ்டெலோ பிராங்கோ பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடுகின்றனர். அதே நேரத்தில் உள்ளூர் அதிகாரிகள் காற்றின் […]

You cannot copy content of this page

Skip to content