பொழுதுபோக்கு

தலைவர் 171இல் இணைந்த சிவா; லோகேஷ் போடும் திட்டம் என்ன?

  • November 28, 2023
  • 0 Comments

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இயக்குநர் லோகேஷ் தற்போது ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முக்கிய […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் 30க்கும் அதிகமான பாடசாலைகள் திடீரென மூடல்

  • November 28, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் மற்றும் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பெறப்பட்ட வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலில் 30 பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வாலோனியா பிரஸ்ஸல்ஸ் கல்வி மையம், தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடலில் உள்ளது. இந்த நிலைமை நிலையான மதிப்பீட்டிற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பணம் பயன்படுத்துவதை தவிர்க்கும் மக்கள்!

  • November 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி, 3 ஆண்டுகளுக்கு முன்பு 27 சதவீதமாக இருந்தது, தற்போது 13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் 2022ல் எந்த விதத்திலும் கரன்சி நோட்டுகளையோ நாணயங்களையோ பயன்படுத்தவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2016ல் 20 சதவீதமாகவும், 2019ல் 33 சதவீதமாகவும் […]

விளையாட்டு

ருதுராஜ் இடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

  • November 28, 2023
  • 0 Comments

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]

இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள்

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கையில் சீன அரசின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுபவர்கள், வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடுகளில் 1,888 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Google Calendar பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

  • November 28, 2023
  • 0 Comments

Google Calendar பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள் விரைவில் உங்களின் சாதனத்தை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுடைய செயலி காணாமல் போய்விடும் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் காலண்டர் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலியாகும். அதாவது இந்த செயலியை பயன்படுத்தி மீட்டிங்கை திட்டமிடுவது, ஈவண்டுகளை உருவாக்குவது மற்றும் நோட்டிபிகேஷன் அமைப்பது போன்ற வேலைகள் எளிமையாக நடந்து வந்த நிலையில் தற்போது அந்த செயலிக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது. […]

செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

  • November 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் – பான் தீவு அதிவேக வீதியில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய லொரி ஓட்டுநர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி காலை 7:30 மணியளவில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற அவர் பேருந்தில் மோதி விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் லொரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் முகமது ஜாஃப்ரி என்ற 27 வயதான அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பணி முடிந்து வீடு திரும்பும் போது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல்

  • November 28, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டு முதல் அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்காக வழங்கப்படும் மாதாந்தம் வழங்கப்படுகின்ற பங்களிப்பு உயர்த்தப்படவுள்ளது. அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்காக வழங்கப்படும் மாதாந்தம் வழங்கப்படுகின்ற பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று இதற்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குழுவானது சிபாரிசு செய்துள்ளது. தற்பொழுது மாதம் ஒன்றுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணமாக 18 யுரோ 36 சென்ட் அறவிடப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டில் இருந்து இந்த கட்டணமானது 18யுரோ 94 சென்டாக உயர்த்தப்படும் என்றும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 2,800 குழந்தைகளின் பரிதாப நிலை – வீதிகளில் உறங்கும் அவலம்

  • November 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சுமார் 2,800 குழந்தைகள் சரியான உணவின்றி, உடுக்க உடையின்றி தினமும் வீதிகளின் ஓரங்களில், தாழ்வாரங்களில் உறங்கும் அவலம் நிலவுவதாக தெரியவந்துள்ளது. அறக்கட்டளை அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனேகமாக வீடுகள் அற்று குழந்தைகளின் தாய்மார்கள், குழந்தைகள் கல்விகற்கும் சிறுவர்கள் பாடசாலைகளின் முன்னால் கூடாரங்கள் போன்று கிடைத்த பொருட்களால் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. காரணம் அவர்களின் குழந்தைகள் அங்கேயே கல்வி கற்பதால் சக மாணவர்களின் பெற்றோர்கள் உணவு, உடை என அவர்களுக்கு […]

இலங்கை

இலங்கையில் பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள்!

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கையில் பொலிஸ் சேவையில் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் புதிதாக 5000 அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.