பிரான்ஸில் சிகரெட் விலையில் ஏற்படவுள்ள பாரிய அதிகரிப்பு
பிரான்ஸில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சிகரெட் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிகரெட் பெட்டி ஒன்றின் விலை சராசரியாக 11.14 யூரோக்களாக அதிகரித்திருந்தது. அதன் பின்னர் இவ்வருடத்தில் விலையேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனவரி மாதம் 50 சதங்களால் விலை அதிகரிப்புக்குள்ளாகிறது. சிகரெட் பெட்டியின் விலை சராசரியாக 12 யூரோக்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.