இலங்கை

உரும்பிராய் காளி கோயிலில் ஐம்பொன்னிலான அம்மன் சிலை திருட்டு!

  • November 29, 2023
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று (28.11) இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகைதிருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இன்று […]

இலங்கை

ஜனாதிபதி வெளியிலே ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமா? ரவிகரன் கேள்வி

ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கையா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு அரிசி வழங்கி வைக்கும் நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த 27 ஆம் திகதி மாவீரர்தினம் தொடர்பாகவும் சில கருத்துக்களை கூற விரும்புகின்றேன். நாட்டின் அரச தலைவர் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர எவ்வித […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆன்லைனில் துப்பாக்கி குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொன்ற இந்திய மாணவன்!

  • November 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தனது தாத்தா, பாட்டி, மாமா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இந்திய மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பாத்(23) சில மாதங்களுக்குமுன்பு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் குடியேறிய தனது பாட்டி வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அந்த வீட்டில் ஓம் பிரம்பாத்தின் தாத்தா திலீப்குமார் பிரம்பாத்(72), பாட்டி பிந்து பிரம்பாத்(72), மாமா யஷ்குமார் பிரம்பாத்(38) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், திங்களன்று ஓம் பிரம்பாத் வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. […]

இலங்கை

யாழில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு அழைப்பு:

மேல்மருவத்தூர் அருட்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறை சமாதிநிலையடைந்த 45 ஆவது நாளினையொட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பணத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 03.12.2023 ஞாயிறுக்கிழமை யாழ் நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் காலாசார மண்டபத்தில் காலை 9 மணிமுதல் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த அன்னதான நிகழ்வினை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் இலங்கை கிளை ஏற்பாடு செய்துள்ளது. சுவிஸ் பேர்ன் மன்றசக்திகள், லண்டன் ஈஸ்ற்ஹாம் மன்றசக்திகளும் லண்டன் […]

உலகம்

காசாவிற்கு வருமாறு எலான் மஸ்கிற்கு அழைப்பு!

  • November 29, 2023
  • 0 Comments

ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் எலோன் மஸ்க்கை காசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட அழிவின் அளவைக் காண காசா பகுதிக்கு வருகை தருமாறு அவர் தெரிவித்துள்ளார்தத. பெய்ரூட்டில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் மேற்படி அழைப்பு விடுத்துள்ளதுடன், “காசா மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் அழிவின் அளவைப் பார்க்க அவரை காசாவுக்கு வருமாறு நாங்கள் அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் […]

இலங்கை

தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் ஏறாவூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

  • November 29, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரில் ஏறாவூர் நகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும் ஏறாவூர் நகர சபை திட்டங்கள் தொடர்ங்கள் அபிவிருத்திகள் , ஏறாவூர் நகர் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஏறாவூர் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் […]

இலங்கை

யாழில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் […]

இலங்கை

(update) கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன!

  • November 29, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இன்றுடன் (29.11) நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் ஒன்பதாம் நாள் அகழ்வு பணியானது இன்று பிற்பகலுடன்  நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டு கட்டமாக இடம்பெற்றிருந்தது. முதல் கட்டம் 11 நாட்களும் இரண்டாம் கட்டம் ஒன்பது நாட்களுமாக மொத்தம் […]

இலங்கை

இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸார்- மௌனமாக இருக்கும் ஜனாதிபதி: -கடுமையாக சாடும் சாணக்கியன்

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார். ”மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக […]

இலங்கை

புதுக்குடியிருப்பல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது!

  • November 29, 2023
  • 0 Comments

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவேலி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன்   இவரல் களவாடப்பட்ட 16 காஸ்சிலிண்டர்கள் ஒரு தண்ணீர் மோட்டார் ஒரு மிதிவண்டி வயர் ரோல்கள் கதிரைகள் தங்கசங்கிலி உள்ளிட்ட பெருமளவான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர். மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் வீடுகளுக்கு செல்லும் குறித்த இளைஞன் அங்கு காணப்படும் […]