இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களான மூவருக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை! வெளியான காரணம்

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது. குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இது தொடர்பான தீர்மானத்தை இன்று (01) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி […]

இலங்கை

இலங்கை: பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம் !

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட விசேட அரச அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், வெண்ணெய், பாலுற்பத்தி பொருட்கள் பலவற்றின் தீர்வை வரி நீக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நிதியமைச்சு இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. சல்மன் மீன், தோடம்பழம், முந்திரிகைப் பழம், யோகர்ட், அப்பிள் பழம், வெண்ணெய் உள்ளிட்ட […]

விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்கு

  • December 1, 2023
  • 0 Comments

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். […]

உலகம்

இங்கிலாந்து வில்லா பூங்காவில் வெடித்த வன்முறை : 46 பேர் கைது

நேற்று இரவு பர்மிங்காமில் லெஜியா வார்சாவுடனான ஆஸ்டன் வில்லாவின் விளையாட்டில் வன்முறை வெடித்ததில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்லா பூங்கா அருகே ரசிகர்களுடன் ஏற்பட்ட மோதலில் நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். போட்டிக்காக வில்லா பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு ரசிகர்களின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடுகள் குறித்த பதட்டங்களால் வன்முறை தூண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுமார் 1,000 ஆதரவாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாததால் வன்முறை வெடித்ததை அடுத்து 46 போலந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசார் […]

ஐரோப்பா

லண்டனில் மாயமான இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு!

  • December 1, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி பயில்வதற்காக கடந்த செப்டம்பரில் லண்டன் சென்ற இந்திய மாணவர் மீத்குமார் பட்டேல், கடந்த நவம்பர் 17ம் திகதி திடீரென மாயமானார். இந்த நிலையில் மாயமான மாணவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ப் பகுதியில் தேம்ஸ் நதியில் மாணவரின் சடலம் மிதந்து வந்ததை அதிகாரிகள் […]

தமிழ்நாடு

கோவையில் 3 நாட்களாக சேர்ப்பாரற்று நின்ற கார்… திறந்து பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • December 1, 2023
  • 0 Comments

கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக சேர்ப்பாரற்று கார் ஒன்று நின்றது. இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காரை பார்வையிட்டனர். பொலிஸாரின் விசாரணையில் அந்த காரானது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.‌ அந்த காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், […]

இலங்கை

வெளியான க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறு: யாழ். வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி மாணவர்களின் சாதனை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர். 8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. வெளியான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் […]

பொழுதுபோக்கு

மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான் ரங்கநாதன் உடைத்த இரகசியம்

  • December 1, 2023
  • 0 Comments

காதல் திருமணம் செய்து கொண்ட மைக் மோகன், மீடியாவில் இதுவரை தனது மனைவியை காட்டியதே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார். 80 மற்றும் 90 கால கட்டத்தில் கொடி கட்டி […]

இலங்கை

இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நாளை (02) ஆழ்ந்த காற்றழுத்த […]

உலகம்

முன் வரிசைகளை வலுப்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும்: ஜெலென்ஸ்கி

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சில முக்கிய பகுதிகளின் தளபதிகளை சந்தித்த பின்னர், முன் வரிசை முழுவதும் பாதுகாப்புகளை விரைவாக பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். “வலுவூட்டல் தேவைப்படும் அனைத்து முக்கிய துறைகளிலும், நாம் கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்த்துள்ளார். ரஷ்யப் படைகள் கிழக்கு நகரமான அவ்திவ்காவை சுற்றி வளைக்க முயல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவர்கள் Kherson மற்றும் Zaporizhzia ஆகிய தெற்குப் பகுதிகளை குறிவைத்து […]