பொழுதுபோக்கு

விமர்சனங்கள் வந்தாலும் முதல் நாளிலேயே ஆச்சரியப்படுத்தியது “அனிமல்”

  • December 2, 2023
  • 0 Comments

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோரின் நடிப்பில் உருவான அனிமல் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. ஆனால் நேற்று படம் வெளியான பிறகு முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான். 3.21 மணி நேரம் ஓடிய படத்தில் பாதிக்கும் மேல் ஓவர் வன்முறை காட்சிகள் தான் நிறைந்திருந்தது. ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்த இப்படம் பாலிவுட் ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் ரயில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்!

  • December 2, 2023
  • 0 Comments

ASLEF இன் ரயில் ஓட்டுநர்கள் இந்த வார இறுதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளனர். இது அடுத்த வாரத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மிட்லாண்ட்ஸ் ரயில்வே மற்றும் LNER இல் உள்ள யூனியன் உறுப்பினர்கள் இன்றைய (02.12) தினம் வெளிநடப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையத் தொடர்ந்து நாளைய தினம் (03.12)  நான்கு வழித்தடங்களில் ஓட்டுநர்கள் வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் ரயில் தாமதம், ஏற்படக்கூடும் […]

இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகள் தாக்கியதால் கைதி ஒருவர் மரணம்!

  • December 2, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று சனிக்கிழமை (1) கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27ம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த […]

ஐரோப்பா

விண்வெளியில் உள்ள பொருட்களை அடையாளம் காணும் திட்டத்தை அறிவித்த மூன்று முக்கிய நாடுகள்!

  • December 2, 2023
  • 0 Comments

UK, US மற்றும் Australia ஆகியவை அதிக ஆற்றல் கொண்ட ரேடார்களைப் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உள்ள பொருட்களைக் கண்காணித்து அடையாளம் காணும் திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின்படி, AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பதற்கும் விண்வெளிப் போக்குவரத்திற்கு உதவுவதற்கும் UK, US மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்று ரேடார்களின் நெட்வொர்க் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ரேடார்கள் முழுமையாக செயல்பட்டால், இந்த அமைப்பு பூமியில் இருந்து 22,000 மைல் தொலைவில் உள்ள பொருட்களை […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் எரிவாயு விலை தொடர்பில் Litro நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

  • December 2, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு Litro Gas நிறுவனம் இந்த மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3565 ரூபாயாக மாற்றமின்றி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

கோடிகளில் சம்பாதிக்கும் குட்டி நயன்தாரா

  • December 2, 2023
  • 0 Comments

சின்ன பொண்ணாவே நடிச்சு தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்ச அனிகா சுரேந்திரன். நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார் அனிகா. படத்துக்கு படம் உயர்வு என தனது சம்பளத்தையும் உயர்த்தி வந்த அனிகாவின் சொத்து மதிப்பு ரூ. 16 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 கோடி அளவில் சம்பளமாக பெற்று வந்துள்ளராம். இளம் நடிகைகளே லட்சத்தில் சம்பளம் வாங்கி […]

கருத்து & பகுப்பாய்வு

கனவுகளை நிஜமாக்க செய்ய வேண்டியது என்ன?

  • December 2, 2023
  • 0 Comments

கனவுகள் என்பது வெறும் கற்பனை அல்ல. அவை இல்லாமல் இலட்சியத்தை அடைய சாத்தியம் இல்லை. கனவுகளை நிஜமாக்கி, லட்சியங்களை சாத்தியமாக்கு வதற்கு தேவையான வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஏன் கனவு காண வேண்டும்? கனவு காணும்போது நிதர்சன உலகை மறந்து நமக்கு சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயங்களை நாம் கற்பனை செய்கிறோம். கனவுகளை துரத்தும் போது நாம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். நேற்றை விட இன்று நாம் சிறந்தவர்களாக மாறியிருப்பதை உணர்கிறோம். வாழ்க்கையில் நிறைய சந்தோஷம் மகிழ்ச்சி […]

செய்தி

இலங்கைக்கு சூறாவளி அச்சுறுத்தல் – அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

  • December 2, 2023
  • 0 Comments

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த நிலை சூறாவளியாக உருவாகி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த நிலை மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3ம் தேதி சூறாவளியாகவும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று பிற்பகல் முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, […]

வாழ்வியல்

தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

  • December 2, 2023
  • 0 Comments

ஊட்டச்சத்து நிபுணரின் கருத்துப்படி கேரட்டில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், வைட்டமின் A, C, பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை தவிர கேரட் பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. கேரட் சாப்பிடுவதால் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறையும்: கேரட்டில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன. இதனால் அடிக்கடி ஏற்படும் பசி உணர்வும் […]

இலங்கை

இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  • December 2, 2023
  • 0 Comments

இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின், சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பொதுச்சந்தை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .